இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கிறார் எடப்பாடியார்… இஸ்லாமியர்களை உசுப்பேற்றிய மு.க.ஸ்டாலின்..!
அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன கேட்டார்? குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட மாட்டார். யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார்.
''இஸ்லாமியர்களுக்கு எதிரான துரோகங்களுக்கு துணை போய்விட்டு இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, திருவான்மியூரில், திமுக, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நடத்திய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ''ஆட்சிக்கு வந்ததும் அதிமுக மிலாடி நபி விடுமுறையை ரசு ரத்து செய்தது. கருணாநிதி ஆட்சிக்கு வந்து, அந்த ரத்தை ரத்து செய்து மீண்டும் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார். அரசியல் ரீதியாக அச்சுறுத்தல்கள் வரும்போது எல்லாம், இஸ்லாமியர்களை காக்கக்கூடிய அரணாக திமுக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் வருந்ததக்க சூழல்கள் இருந்தாலும் நம் தமிழகத்தில் மத ரீதியிலான வன்முறைகள் ஏற்படாமல் காத்து வரும் அரசாக திமுக அரசு எப்போதும் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க.. மு.க.ஸ்டாலினை கலாய்த்து... உ.பி-க்களை மேடையிலேயே மிரட்டிய திமுக நிர்வாகி..!
குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது இன்றைக்கு இருக்கும் அதிமுக. குடியுரிமை திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்ளித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.
ஆனால், அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன கேட்டார்? குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட மாட்டார். யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டீர்கள். இப்போது அவர் எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமிய விழாவில் போய் கலந்து கொள்கிறார்.
ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு விட்டு, அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்து கொள்கின்றனர். பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது மனித உரிமையை பறிக்கிறது என்றும் மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது திமுக தான்.
இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பேசும் பொருளாக ஆகி இருக்கிறது. சிறுபான்மையின மக்கள் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பாஜக இதை கொண்டு வர பார்க்கிறது. அதையும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறது.
ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது.
உறுதியாக போராடுவோம். உங்களுக்கு எப்போதும் துணையாக நாங்கள் இருப்போம். இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, அவர்களுக்கு காவல் அரணாக விளங்குகிற இயக்கமாக திமுக எந்நாளும் இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..!