×
 

நெல்லை ஆட்சியர் பெயரில் கவர்ச்சி படங்கள்; சோசியல் மீடியாவில் கைவரிசையைக் காட்டிய மர்ம ஆசாமிகள்!

நெல்லை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டு, அதில் கவர்ச்சி படங்கள் பதிவேற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சோசியல் மீடியாக்களில் போலி கணக்குகளை உருவாக்கி பணம் பறிப்பது, மார்ப்பிங் செய்த புகைப்படங்களை பதிவிடுவது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சைபர் க்ரைம் குற்றவாளிகள், போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர் போலவே அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பண உதவி கேட்டு மெசெஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். பொதுவாக பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்குவதும், அவதூறு பரப்புவதும் வழக்கமானதாக மாறிவிட்டது. ஆனால் நெல்லை ஆட்சியரின் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டதோடு, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மர்ம ஆசாமிகள் அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி கைவரிசை காட்டியுள்ளனர். 

நெல்லை ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ் என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். அந்த முகநூல் பக்கத்தின் முகப்பு படத்தில் ஆட்சியர் கே.பி.கார்த்திகேயனின் புகைப்படம் இடம்பித்துள்ளது. அத்துடன் ஆட்சியர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களுடன், வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அமீர்கான் பட நடிகை பாத்திமா சனாவை "படுக்கை"க்கு அழைத்த பட அதிபர்:தென் இந்திய திரை அனுபவம் குறித்து மனம் திறந்த பேட்டி

அத்துடன் போலி முகநூல் கணக்கு வாயிலாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சிலருக்கு நட்புக்காம அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சில ஊடகவியாளலர்களுக்கும் திட்டமிட்டே போலி முகநூல் கணக்கில் இருந்து நட்புக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியருக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, போலீசாரிடம் கே.பி.கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த கணக்கை முடக்குவது தொடர்பாகவும், யார் போலி முகநூல் கணக்கை உருவாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பட்ஜெட் 2025: கவலையில் கல்வித்துறை! குறைந்த நிதி, அதிக ஜிஎஸ்டி, குறைவான முதலீடு எப்போது களையப்படும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share