சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு..!
விருதுநகரில் சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள்- காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள கழுவனச்சேரி மின்னரஞ்சம்பட்டி கிராம பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி கிராம விவசாயிகள் சுமார் 430 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் விளை நிலத்தில் புதியதாக அமைய உள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வேளாண் விளைநிலத்தில் புதிய சிப்காட் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அதானி துறைமுகத்தில் காணாமல் போன ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகள்... கதி கலங்கிப்போன அதிகாரிகள்!
சிப்காட் நில எடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராம விவசாயிகள் மற்றும் காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: இந்தியா உட்பட 14 நாடுகளின் விசாக்களுக்குத் தடை... சவுதி அரேபியா அதிரடி..!