பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..!
திருவள்ளூர் அருகே வாய் பேச முடியாத, காது கேட்காத, சற்று மன நலம் பாதித்த 27 வயது திருமணம் ஆகாத மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மனைவி லைலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.
இவர்களின் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி சென்னையில் அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் தனது அக்கா மகளான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மதிமாறன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு வாய் பேச முடியாத, காது கேட்காத, சற்று மனநலம் பாதித்த நிலையில் அழகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. 27 வயது அந்த பெண் சிறு வயது முதலே தனது பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது பாட்டி உயிரிழந்த நிலையில் தனது மகளான அழகியை இனி நாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறி மதிமாறான் மற்றும் தாய் சுமதி அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மகள் அழகியிடம் இரவு நேரங்களில் பெற்ற தந்தையான மதிமாறன் மார்பில் கை வைப்பதும், முத்தம் கொடுப்பது உள்ளிட்ட தவறான செயல்களில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!
இதனால் அழகி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். இதனை அடுத்து அழகி சென்னையில் உள்ள தனது உறவினர்களான சித்தி மற்றும் அத்தைக்கு தொலைபேசி மூலமாக வீடியோ கால் செய்து தான் இங்கு உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வருவதாக சைகைகள் காட்டி தன்னை உடலிலும், மார்பிலும், உதட்டிலும் கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தந்தை பற்றி புகார் தெரிவித்தார்.
தான் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்காவது சென்று விடுவேன் என அழுது புலம்பிய உள்ளார். இந்த நிலையில் இதை பார்த்த அத்தைக்கு கோபம் வரவே உறவினர்களை ஒன்று திரட்டி கொண்டு அவர்களது வீட்டிற்கு வந்து மதிமாறனிடன் இது சம்பந்தமாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த மதிமாறன், உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இது உறவினர்களிடைய வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து கடந்த 30-ஆம் தேதி புகார் அளித்து உள்ளனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாய் பேச முடியாத காது கேட்காத, சற்று மனநலம் பாதித்த 27 வயது அழகியை அழைத்து விசாரணை செய்து அவரது உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்து கோபமடைந்தார். சம்பந்தப்பட்ட தந்தை மதிமாறனை அழைத்து வந்து எச்சரித்துள்ளார்.
எனினும் அவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதிமாறன் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் முதல் மனைவியின் மகன் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு பஞ்சாயத்து பேசி அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தையே பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்த மகள் புகார் அளித்துள்ளார். வாய்பேச முடியாத பெற்ற மகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த தந்தையின் செயல் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடுதி மாணவர்களை பதம் பார்த்த பாதிரியார்.. பாலியல் ஃபாதரை கைது செய்த போலீஸ்..!