மளிகை கடையில் பயங்கர தீ விபத்து.. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
கடலூர் அருகே மளிகை கடை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் தீக்கிரையாகின.
கடலூரைச் சேர்ந்த திருஞானம் என்பவர் அவருக்கு சொந்தமாக விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடையை பூட்டிவிட்டு இடைவேளைக்காக திருஞானம் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது திருஞானம் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து அவர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சி அடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் பற்றிய தீ.. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!
இந்த விபத்தில் குடோனில் இருந்த பிரிட்ஜ் மற்றும் மளிகை பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. மேலும் இந்த விபத்து நாள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. முன்னதாக தீ பிடித்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கையில், மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: விஜயின் புது கெட்டப்பை பார்த்து வெறியான தொண்டர்கள்... தவெக இஃப்தார் நிகழ்ச்சியில் பரபரப்பு...!