×
 

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 4 பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை!

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரில் இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஜகபர் அலி மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில் ஜகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை திருமயம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 17.50 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்தனர்

 


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் என்பவரின் மகன் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் சிலக் குவாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் பலநூறுக் கோடிக்கான கனிமவளக் கொள்ளை நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, லாரி மோதி உயிரிழந்தார். இவரது மரணத்தின் பின்னணியில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்போது 4 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share