ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு.. மைசூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர் சேந்தன். வயது 45. துபாயில் பணிபுரிந்த சேந்தன் கடந்த 2019ல் மைசூருக்கு வந்தார். ஆன்லைன் செயல்முறையைப் பயன்படுத்தி சவுதிக்கு தொழிலாளர்களை அனுப்பும் தொழில் செய்துவந்தார். விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி ரூபாலி மற்றும் குஷாலுடன் வசித்து வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு வீட்டில் சேந்தனின் தாயார் பிரியம்வதா தனியாக வசித்து வந்தார்.
சேந்தனுக்கு தொழிலில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும், கடன் சுமையால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு சேத்தன் போன் செய்துள்ளார். தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். பதறிப்போன பரத், சேந்தனின் மனைவி ரூபாலியின் பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே சேந்தனின் வீட்டிற்கு சென்று அவர்களை காப்பாற்றும்படி தெரிவித்துள்ளார். அதன்படி ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்று பார்க்கும் முன் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். தாய் பிரியம்வதா அவரது வீட்டிலும், சேந்தன், அவரது மனைவி, மகன் அவர்களது வீட்டிலும் இறந்து கிடந்தனர்.
இதையும் படிங்க: கும்பமேளா சென்றவர்கள் 4 பேர் பலி.. பல முறை பல்டி அடித்த ஜீப் ..
சம்பவ இடத்தில் சேந்தன் எழுதியதாக கூறப்படும் கடிதம் சிக்கியது. அதில் எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்த கூடாது என்றும், இதற்கு நானே பொறுப்பு என்றும் எழுதி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டது அருமை.. அரசை பாராட்டிய நீதிமன்றம் ..