ஏமாத்துறதுல புது டெக்னிக்கா? முதியோர் இல்லத்தில் மோசடி.. போலி CRPF வீரர் கைவரிசை..!
குமரி மாவட்டம் அருமுனை பகுதியில் ஆர்மி ஹேர் கட் - முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து முதியோர் இல்ல நிர்வாகியிடம் பணம் பறித்த போலி சி.ஆர்.பி.எப் வீரரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அருமனை பகுதியை அடுத்த புண்ணியம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி வந்த வாலிபர் ஒருவர் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராஜனை சந்தித்து பேசி உள்ளார். தான் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.
தொடர்ந்து தங்களுடைய சி.ஆர்.பி.எப் கேம்ப் சற்று தொலைவில் தான் உள்ளது என்றும், தங்களது கேம்பை இந்தப் பகுதியில் இருந்து மாற்ற உள்ளோம் என்றும் நைசாக பேசி உள்ளார். இங்குள்ள பிரிட்ச், வாஷிங் மெஷின் உட்பட மளிகை பொருட்கள் அரிசி பொருள்களை தங்களுடன் எடுத்துச் செல்ல மாட்டோம்.
அதனால் உங்களைப் போல் முதியோர் காப்பகங்களை நடத்துபவர்களுக்கு குறைந்த விலையில் விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவர்களை நம்ப வைப்பதற்காக அடிக்கடி செல்போனில் பலருடன் தொடர்பு கொண்டு, அரிசி மூட்டைகளை அந்த காப்பகத்திற்கு இறக்கி விட்டீர்களா? எலக்ட்ரானிக் சாதனங்களை மற்ற பகுதியில் இறக்கி விட்டீர்களா? என பாசாங்கு நாடகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் வந்த பைக்கிலும் சி.ஆர்.பி.எப் என்று எழுதி இருந்துள்ளது.
இதையும் படிங்க: இரவில் திருட்டு.. பகலில் உல்லாசம்.. இரும்பு ராடோடு வீதி உலா.. கதிகலங்க வைத்த திருடர்கள் கைது..!
இந்த பாசாங்கு நாடகத்தைப் பார்த்து நம்பிய முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராஜன், தங்கள் முதியோர் இல்லத்திற்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அந்த மர்ம நபர் 43,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். நம்பி பணத்தை அந்த மர்ம நம்பரிடம் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்க அவருடனே பைக்கில் ஏறி சென்றள்ளார் ரகுநாதன்.
இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ரகுராஜனை பைக்கில் இருந்து மர்ம நபர் இறக்கிவிட்டுள்ளார். சி.ஆர்.பி.எப் கேம்ப் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் தான் அவரை இறக்கி விட்டதாகவும், தான் சென்று பேசி முடிந்துவிட்டு தங்களை அழைத்து செல்கிறேன் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார். பல மணி நேரம் கழிந்தும் சி.ஆர்.பி.எப் வீரவென்று கூறிய இந்த நபர் திரும்பி வராததாலும், அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போதும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததாலும் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார் ரகுராஜன்.
அங்கிருந்து திரும்பி வந்து ரகுராஜன் அருமனைக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று காப்பகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மர்ம நபரோ தன்னுடைய முகம் பதிவாகாமல் இருக்க உஷாராக கருப்பு கலர் மாஸ்க் அணிந்தும் வந்துள்ளார். தொடர்ந்தும் முதியோர் இல்லத்தில் வந்து சி.ஆர்.பி.எப் எனக்கூறி மோசடி நடத்திய நபரை தேடியும் வருகின்றனர். தற்போது வரையிலும் மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்பது தெரிய வரவில்லை.
ஒருபுறம் இந்த மோசடி நடக்க அதே நாளில் புண்ணியம் பகுதியை அடுத்த முழுக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் சென்று மோசடி செய்ய முயலும் போது, தங்களிடம் பணம் இல்லை என கூறி நிர்வாகிகள் அந்த நபரை அங்கிருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.
அங்கிருந்து நைசாக தப்பி அந்த நபர் தனது மோசடியை புண்ணியம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தான் முதியோர் இல்லத்தில் சி.ஆர்.பி.எப் என கூறி மோசடி நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளும், அவரது புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..!