×
 

ரன்வேயில் கழண்டு விழுந்த டயர்.. விமானத்தில் ஊசலாடிய பயணிகள் உயிர்.. உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..

நேபாளத்தின் ஜனக்பூரிலிருந்து திரிபுவனம் சென்ற விமானத்தின் முன் பக்க டயர் விமான ஓடுபாதையில் கழண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் முதல்தர சொகுசு மற்றும் அதிவிரைந்த போக்குவரத்து சேவையாக விமான சேவை இருந்து வருகிறது. இன்னும் பல அடிதட்டு மக்களுக்கு விமான பயணம் என்பதே கனவாகத் தான் உள்ளது. இந்நிலையில் விமான பயணத்தில் ஏற்படும் சின்ன சின்ன விஷயங்களும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சமீபத்தில் அமெரிக்கா அருகே சரக்கு விமானம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு சில தினங்களுக்கு முன் கனடாவில் மோசமான காலநிலை காரணமாக விமானம் ஒன்று ஓடுபாதையில் தலைக்குப்புற கவிழ்ந்த சம்பவமும் அரங்கேறியது.

சில தினங்களுக்கு முன் விமானி ஒருவரை பறக்கும் விமானத்தில் சிலந்தி ஒன்று கடித்த சம்பவம் உடன் பயணித்த பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இது போன்ற சம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓடும் போது விமானத்தின் முன்சக்கரம் கழண்டு விழுந்த சம்பவம் தற்பொது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவம் நேபாளத்தில் அரங்கேறி உள்ளது. அதுவும் பயணிகள் விமானத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அந்த விமானத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த நிலையில் அவர்களின் கதி.?

இதையும் படிங்க: திடீர் தொழில்நுட்ப கோளாறு.. ஒரு மணி நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்..!

நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் மாலை 4.45 மணி அளவில் புத்தா ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் ஓடுபாதையில் ஓடி மேலே எழும்பி சென்றபோது, அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழுந்துள்ளது. ஆனால், விமானிகள் கவனிக்க வில்லை. அவர்களின் கவனத்திற்கும் அது செல்லவில்லை. பயணத்தின்போது, கோளாறுக்கான அடையாளங்களை விமானமும் வெளிப்படுத்தவில்லை. இந்த சூழலில், மாலை 05.15 மணி அளவில் திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது.

அப்போது, வழக்கம்போல் நடந்த ஆய்வின்போது, விமானத்தில் முன் சக்கரம் இல்லாதது தெரிய வந்தது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், உடனடியாக கழண்டு விழுந்த விமான சக்கரத்தை தேடும் பணி நடந்தது. இதில், ஜனக்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே விமானம் திரும்பும் பகுதியில் முன் சக்கரம் கிடந்துள்ளது. அவற்றை ஊழியர்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர். விமானம், முன் சக்கரம் இன்றி 25 நிமிடங்கள் பறந்தபோதும் அது எதுவும் தெரியாமல் விமானிகளும், பயணிகளும் மற்றும் விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 


அதில் பயணித்த 62 பயணிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். இந்த விவரம் அவர்களுக்கு பயணத்தின்போது தெரியாமல் இருந்ததால் எவ்வித பதட்டமோ, பயமோ இன்றி விமானத்தில் பயணித்துள்ளனர். இதனால், திகிலான நிமிடங்களை அவர்கள் கடந்து வந்தது அவர்கள் அறிந்திருக்கவில்லை. மேலும் பயணமும் பாதுகாப்பான பயணமாக அமைந்தது. இந்த சம்பவம் பற்றி அந்நாட்டு விமான போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 11 ரூபாய்க்கு வெளிநாடு செல்லலாம்.. கனவிலும் கிடைக்காத விமான டிக்கெட் ஆஃபர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share