×
 

கூட்டு பலாத்காரம் செய்து மைத்துனி கொலை: 40 ஆயிரம் கடன் வாங்கி, கூலிப்படையை ஏவிய வெறிச்செயல்

உத்தரப்பிரதேசத்தில் தகாத உறவு வைத்திருந்த மைத்துனி தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டியதால் கூலிப்படை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார். 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொலையாளி ஆஷிஷ் குமார், முசாபர் நகர் மாவட்டம் புதானா என்ற இடத்தில் வசித்து வந்தார் தனியார் மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை செய்து வந்த ஆஷிஷ் குமாருக்கு அவருடைய மைத்துனியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. 

அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தபோது அந்த பெண் ரகசியமாக சில புகைப்படங்களை எடுத்து பின்னர் இந்த புகைப்படங்கள் காட்டி தன்னை திருமணம் செய்யும்படி அந்த பெண் ஆஷிஷ் குமாரை மிரட்டி வந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ் குமார் தனது மைதினியை கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்காக அவருடைய இரண்டு நண்பர்களை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வங்கியில் இருந்து ரூ. 40,000 அவர் கடன் வாங்கி இருந்தார். 

இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

பாதி பணத்தை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி பணம் சம்பவம் நடந்த பிறகு தருவதாக நண்பர்களிடம் ஆஷிஸ் குமார் கூறியிருக்கிறார். அதன்படி பின்னர் அவர், தனது மைதுனியை இருசக்கர வாகனத்திஅல் அவர்களுடைய வயல் காடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

முதலில் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவள் அணிந்திருந்த தாவணியால் கழுத்தை  நெறித்து கொடூரமாக கொலை செய்தனர். சாட்சியங்களை அழிப்பதற்காக பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி தீயை வைத்தனர். இதில் அவருடைய உள்ளாடைகள் அப்படியே இருந்தன. மற்ற ஆடைகள் எரிந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

அதன் பிறகு ஆஷிஷ் குமார் குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சாட்சியங்களை அழிப்பதற்காக உடனே பெட்ரோல் ஊற்றி அவர்கள் தீவைத்து கொடுத்து இருக்கிறார்கள். சம்பவ இடத்தில் ஆணுறை பாக்கெட்டுகளும் கிடந்ததால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் போலீசாருக்கு இருந்தது. 

அதைத் தொடர்ந்து விசாரணை தீவிர படுத்தப்பட்டு முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர்களுடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share