டார்ஜிலிங், ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. சென்னையில் விற்பனை செய்த பெண்கள் உட்பட 7 பேர் கைது..
ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னை பகுதியில் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 22.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல் போன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு போதை வஸ்துக்கள் எளிதில் கிடைப்பதுவே காரணம் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதன்காரணமாக சென்னை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சென்னை பகுதியில் கஞ்சா பயிரிடுதலையும், கஞ்சா விற்பனையும் வெகுவாக குறைத்துள்ளனர். கஞ்சா ஆப்ரேஷன் 1.0-வில் துவங்கி, கஞ்சா ஆப்ரேஷன் 2.0, கஞ்சா ஆப்ரேஷன் 3.0, கஞ்சா ஆப்ரேஷ 4.0 என தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கைகளை தமிழக போலீசார் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா விற்பனையும், கஞ்சா பயிரிடுதலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சில சமூக விரோத கும்பல் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழக எல்லையோர பகுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இருப்பினும் புதுப்புது வழிகளில் கஞ்சாவை கடத்தி வந்து தமிழக பகுதிகளில் விற்பனை செய்வது தொடர்கிறது. இதன் ஒருபகுதியாக சென்னை கண்ணகி நகர் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திஉள்ளனர். அப்போது கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 22 வயதான நிவேதா என்பவரும், 23 வயதான சலீம் ஷாரிப், 28 வயதான பிரமிலா, 27 வயதான கார்த்திக் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈட்பட்டது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இந்த கஞ்சாவை கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பணை செய்வதும் தெரிந்தது. இதேபோல் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவுக்கு கிடைத்த ரகசியதகவலின் பேரில் கடந்த 23ம் தேதி தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், பள்ளிக்கரணை,காமக்கோடி நகர், பேருந்து நிலையம், அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தட்சினாமூர்த்தி வயது 20. சைஹ புஹாரி வயது 23, பிரகாஷ் ராஜ் வயது 27 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக 22.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்ய்யப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் இந்த கஞ்சாவினை டார்ஜிலிங்கில் இருந்து வாங்கி வந்தது தெரிந்தது.
இதையும் படிங்க: வாடகை வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்.. அதிரடி சோதனை நடத்தி தட்டி தூக்கிய கோவை போலீஸ்..!
7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலிசார், சம்மந்தப்பட்டகுற்றவியல் நீதித்துறை நடுவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்குஅனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். மேலும், இவ்விதமான நடவடிக்கைகள், போதை பொருள் கடத்தல் மற்றும்விற்பணை குற்றங்களை தடுக்கும் முயற்சிகள் காவல்துறையால் தீவிரப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; T-15 கன்னகி நகர் போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 23.02.2025ம் தேதி சுமார் 17.00 மணியளவில் T16 கன்னகி நகர் காவல் நிலையம் கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பு அருகில் வைத்து 1) நிவேதா @ முசல் வ/27, 2) சலிம் ஷாரிப் வ/23, 3) பிரமிலா வ/28, மற்றும் 4) கார்த்திக் வ/27, என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இந்தகஞ்சாவினை ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து கண்ணகி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பணை செய்வதாக கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இது சம்மந்தமாக கண்ணகி நகர் காவல் நிலையகுற்ற எண்: 95/2025, u/s 8(c), 20(b) (ii) (B), 29(i) NDPS Act - ன்படி வழக்குபதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவுக்கு கிடைத்த ரகசியதகவலின் பேரில் 23.02.2025 ம் தேதி சுமார் 07.15 மணியளவில் பள்ளிக்கரணை,காமக்கோடி நகர், பேருந்து நிலையம், அருகில் வைத்து 1)தட்சினாமூர்த்தி வ/20, 2)சைஹ புஹாரி வ/23, 3) பிரகாஷ் ராஜ் வ/27 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 8.500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை டார்ஜிலிங்கில் இருந்து வாங்கிவந்து பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கும் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் விற்பணை செய்வதாக கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இது சம்மந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்றஎண்: Cr.no. 13/2025 u/s 8(c), 20(b) (ii) (B) 29 (1) of NDPS Act - ன்படி வழக்குபதிவு செய்து, புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேற்படி 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட 7 நபர்களையும் சம்மந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மேலும், இவ்விதமான நடவடிக்கைகள், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பணை குற்றங்களை தடுக்கும் முயற்சிகள் காவல்துறையால் தீவிரப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!