×
 

ரமலான் எதிரொலி.. மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு.. ஆயிரம் ரூபாய் விலை போன ஆடுகள்..

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆட்டு சந்தையில் ஆடுகளின் வரத்து குறைந்ததால் ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் வரை எகிறியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இச்சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை நடைபெறும். அதேபோல் ஆட்டுச்சந்தையும் வாரந்தோறும் புதன்கிழமை காலை 6 மணிக்குத் துவங்கி 10 மணிவரை நடைபெறுவது வழக்கம். 

இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டுவரப்படும். இந்நலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விலை அதிகரிக்கும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பணை செய்வதற்காக அதிகளவில் சந்தைக்கு கொண்டுவரும் நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இன்று சந்தை நடைபெற்றது.

இதையும் படிங்க: மாநகராட்சியாகிறது புதுச்சேரி... முதல்வர் ரங்கசாமி சூப்பர் அறிவிப்பு!!

சந்தையில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. சுமார் 3000ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பணைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. ஆடுகளில் வரத்து குறைவாக இருந்ததால் அதன் விலை ரூ.1000 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரமலான் மற்றும் திருவிழா காலம் என்பதால் கூறு சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ஒரு நாள் மட்டும் ரூ ஒரு கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ஆடுகளின் வரத்து குறைவால் ரூ‌ 80 லட்சம் வரை மட்டுமே விற்பணை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி… 100 நாள் ஊரக வேலைக்குச் செல்லும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரி: இவ்வளவு வறுமையா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share