×
 

வேலைக்கு வரலனா சம்பளம் இல்ல.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழக அரசு கிடுக்குப்பிடி..!

பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர். 2023-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்ய வேண்டுமென அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக அரசு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் கூட பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: தமிழக அரசு தூங்குவது போல் நடிக்கிறது.. சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி ராமதாஸ் விமர்சனம்..!

ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பட்ஜெட்டில் கூட எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

இதனை அடுத்து இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில், போராட்டம் நடத்தி பணிக்கு வராமல் இருப்பவர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசின் செயல்பாட்டை பாதிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ விடுப்பை தவிர, வேறு எந்த விடுப்பும் அரசு ஊழியர்கள் இன்று எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக்கூடாது, காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? அண்ணாமலை கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share