×
 

முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து… அடியோடு மாறிய ஆளுநர்..!

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பெருமை பிரதமர் மோடியை சேரும்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநரின் ஆர்.என்.ரவி தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் ''அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். 


மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கும்பமேளா கோலாகலம்.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

''தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து வந்தார். இந்நிலையில் அந்த வாழ்த்துக் கடிதத்தில்,  'தமிழ் நாட்டு' மக்களுக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் என்றே அழைத்து வந்த ஆர்.என்.ரவி, தமிழ் நாடு எனக் குறிப்பிட்டுள்ளது அவர் இந்த விஷயத்தில் அடியோடு மாறி விட்டாரா? என எண்ணத் தோன்றுகிறது.  

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற அன்று, ஒரு நிருபர் தமிழில் கேள்வி எழுப்பிய போது “தமிழ் கற்க முயற்சி செய்வேன்” என தெரிவித்து இருந்தார். தமிழ் கற்று வரும் ஆளுநர் ஆர்,என்,ரவி தமிழில் தீபாவளி வாழ்த்துச்செய்தியை கூறி இருந்தார்.

நேற்று நெல்லையில் நடைபெற்ற விழாவில் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்களை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் புத்தகங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் வேறு கட்சி ஆண்டாலும் வளர்ச்சி திட்டங்களை வழங்குவதில் பிரதமர் மோடி பாகுபாட்டை காண்பித்தது இல்லை.

உள்நாட்டிலும் சரி அயல்நாட்டிலும் சரி, சில அந்நிய சக்திகளுக்கு சனாதன தர்மம் உயர்வது பிடிக்கவில்லை. தமிழக மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக வேதனையாக இருக்கிறது. தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பெருமை பிரதமர் மோடியை சேரும்'' எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் பதவியின் கண்ணியம் காக்கணும்.. நடத்தை விதிகள் கொண்டு வாங்க.. நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப திமுக முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share