போதையில் கண்மூடித்தனமாக பாய்ந்த கார்.. பெண் மீது ஏற்றி கொன்ற வாலிபன் கைது.. ஓம் நமச்சிவாயா என கத்திய குரூரம்..!
குஜராத் மாநிலம் வதோராவில் போதையில் கார் ஓட்டிச் சென்று பெண்ணை கார் ஏற்றிக் கொன்ற சட்டக்கல்லூரி மாணவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று மாலை ஹேமானி படேல் என்னும் இளம்பெண் தனது மகளுடன் ஹோலி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு சென்றுள்ளார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கருப்பு நிற கார் ஒன்று, ஹேமானி படேல் மீது மோதியது மட்டுமல்லாமல் தரதரவென்று இழுத்துச் சென்றது. மேலும் அங்கிருந்த கார், 2 டூவிலர்கள் என அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 1 குழந்தை உட்பட 7 பேர் காயம் அடைந்தனர். காயடமைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. அந்த அளவிற்கு கார் வேகமாக ஹேமானி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஹேமானி படேல் உயிர் இழந்தார்.அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய வாலிபன் ஒருவன் மாமா, அனதர் ரவுண்ட். ஓம் நமச்சிவாயா என குடிபோதையில் கத்தியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் செயல்பட்ட இளைஞனை அங்கிருந்த மக்கள் துரத்தினர். அந்த இளைஞர் அங்கிருந்த மக்களிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சித்தான். அதற்குள் மக்கள் அவனை துரத்திப் பிடித்தது அடி வெளுத்தனர். விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞனை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் காரில் அமர்ந்திருந்த காரின் உரிமையாளரான மற்றொரு வாலிபனையும் கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டி வந்து விபத்து ஏற்பத்தி பெண் உயிரிழப்பதற்கு காரணமானவன், குஜராஜ் மாநிலம் வதோராவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ரக்ஷித் சௌராசியா என்பது விசாரணையில் தெரிந்தது.
காரை ஓட்டி வந்த போது சௌராசியா மித மிஞ்சிய போதையில் இருந்ததும், கார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததும் கண்டுபிடிக்கபப்ட்டது. காரின் உரிமையாளரும், சௌராசித்தின் நண்பருமான, காரில் அமர்ந்திருந்த மற்றொரு நபர், மித் சௌஹான் என போலீசார் தெரிவித்தனர்.
அவர் குடிப்போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றது மட்டுமல்லாமல் பெண் மீது கார் ஏற்றி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கும்பமேளா சென்றவர்கள் 4 பேர் பலி.. பல முறை பல்டி அடித்த ஜீப் ..