ரிசல்ட் இன்னும் பார்க்கவில்லை..! அதிர்ச்சி அளித்த பிரியங்கா..
ரிசல்ட் இன்னும் பார்க்கவில்லை.. அதிர்ச்சி அளித்த பிரியங்கா..
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலையில் இருந்தே பரபரப்பாக வெளிவர தொடங்கின. தலைநகரில் நடைபெறும் கடுமையான மும்முனை போட்டி என்பதால், இதில் வெற்றி பெறுவது யார் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்ட பிரியங்கா காந்தி இன்று தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றார்.
அந்த சமயத்தில் வெளிவரத் தொடங்கிய தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் முதலில் நெருக்கமான போட்டி இருந்து பின்னர் பாஜக வேகமாக முன்னேற தொடங்கியது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பாகிஸ்தான் சாயல் கொடி..? தன்மானத்தோடு களத்தில் இறங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னணி வகிக்காமல் மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத ( 0 ஹாட்ரிக்) நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது.
வழியில் பிரியங்காவை பேட்டி கண்ட செய்தியாளர்கள் டெல்லி தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், "எனக்குத் தெரியாது; நான் இன்னும் முடிவுகளை சரி பார்க்கவில்லை" என்று பதிலளித்தது செய்தியாளர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
டெல்லியில் காங்கிரஸின் நிலை பற்றி பிரியங்காவிற்கு முன்னதாகவே தெரியுமா? அதனால்தான் முடிவை அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாரா? தீவிர அரசியலில் குதித்திருக்கும் முக்கிய தலைவரான பிரியங்கா காந்தியா இப்படி பேசுவது? என்ன பல்வேறு சிந்தனைகள் செய்தியாளர்கள் மனதில் ஓடியது!
உடனே இந்த தகவல்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்த பதிலைப் பார்த்த நாட்டு மக்களுக்கும் அதே எண்ணங்கள்தான் அலை மோதி இருக்க வேண்டும்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை; பிரியங்கா பின்னர் அளித்த பேட்டியில், "டெல்லி மக்கள் சளிப்படைந்து விட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. காங்கிரஸ் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறி ஒரு வழியாக நிலைமையை சாதுரியமாக சமாளித்து விட்டார்.
இந்த பேட்டியின் போது டெல்லியில் தனது பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"டெல்லி தேர்தலுக்கு முன்பாக நடந்த பிரசாரக் கூட்டங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புவதை உணர முடிந்தது. டெல்லியில் நடந்தவற்றை பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர். அவர்கள் மாற்றத்தை விரும்பினர்.
மாற்றம் வேண்டி வாக்களித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மற்றபடி, எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். களத்தில் நின்று வேலை செய்து மக்கள் பிரச்சினைகளுக்கு போராட வேண்டும் என்று உணர்த்தியுள்ளது" என்றும் தெரிவித்தார் .
இதையும் படிங்க: துடைப்பத்தை எட்டு எட்டாய் வெட்டி எறிந்த கை… அரவிந்த் கெஜ்ரிவாலை காவு வாங்கிய காங்கிரஸ்..!