கஞ்சா கடத்தியவர் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டும்.. போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
கஞ்சா கடத்தியவர் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டும்..
கஞ்சா கடத்திய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2023 ம் ஆண்டு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி போது, அவர் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: கோயில் நிலத்தில் தாராளமாக கல்லூரி கட்டிக் கொள்ளலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அடையார் போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப்பிரிவு காவல்துறை, சரவணை கைது செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி, கோவிந்தராஜன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, கஞ்சா விற்பனை செய்த சரவணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு வரிவிலக்கு.. மத்திய பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு..