×
 

இந்திய சினிமாவின் அடையாளம் அவர்..! மறைந்த ஹிந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

1937 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்த மனோஜ் குமார், ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தது மட்டுமின்றி இயக்கியும் பிரபலமடைந்தவர். 

புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் மனோஜ் குமார்.1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் இவருக்கு மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மனம் குளிர வரவேற்கும் டாக்டர் ராமதாஸ்!!

பின்னர், பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பின் காரணமாக, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் மனோஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார் என்றும் குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது எனவும் குறிப்பிட்டார்.

மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின., மேலும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து அவை ஊக்கமளிக்கும்., அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து துயரத்தில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வருகை எதிரொலியா..? பாம்பன் பள்ளிவாசலின் மினாரா மூடப்பட்டதா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share