நாயை இப்படியா விடுவீர்கள்..மளிகை கடை பெண்ணிடம் ரகளை ..Ex ஊராட்சி தலைவர் கைது ..!
ஒசூர் அருகே வளர்ப்பு நாயால் ஏற்பட்ட பிரச்சனையில் மளிகை கடைக்காரரை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (43) இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். வேணுகோபால் பாகலூர் தேர்ப்பேட்டை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பாகலூர் ஊராட்சி மன்ற மு.தலைவர் வி.டி.ஜெயராம் வீட்டில் வளர்க்கும் நாய் வேணுகோபாலை குறைத்தபடி விரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து வேணுகோபால், வி.டி.ஜெயராமின் மனைவியிடம் நாயை இப்படியா விடுவீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு நாய் ஒன்றும் செய்யாது நீங்கள் போங்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வேணுகோபால், ஆனந்தம்மா அருகில் இருந்து சேரை எடுத்து போட்டு அவர் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆனந்தம்மா தனது கணவர் வி.டி. ஜெயராமிடம் இதுகுறித்து செல்போனில் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் நேற்று மாலை வி.டி.ஜெயராம், வேணுகோபாலின் மளிகை கடைக்கு சென்று அவரிடம் கேட்டபோது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறி கடையில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி உள்ளார். மேலும் வேணுகோபாலையும் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாகலூர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். காயமடைந்த வேணுகோபால் ஆட்டோவில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அவரை வழிமறித்து சிலர் மீண்டும் அவரை தாக்கியுள்ளனர். இதில் வேணுகோபாலுக்கும் அவரது மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வேணுகோபால் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருதரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகி உள்ளநிலையில்இதுக்குறித்து பாகலூர் போலிசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன், அவரது ஓட்டுநர் நவீண் ஆகியோரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..
இதையும் படிங்க: இங்கிலாந்து இளம் பெண்களிடம் அத்து மீறியது ஆசியர்கள் அல்ல பாகிஸ்தானியர் தான்..!இந்திய எம்பி திட்டவட்டம்..எலன் மஸ்க் ஆதரவு