கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூரம்.. கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்.. ஹைதரபாத்தில் கணவன் கைது..!
ஹைதரபாத்தில் கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்தவர் எம்.டி. பஸ்ரத். (வயது 32). இவர் பிழைப்புக்காக ஐதராபாத் நகரத்திற்கு வந்து, ஹபீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஆதித்யநகரில் தனது தங்கி உள்ளார். அதே பகுதியில் இண்டிரியர் டிசைனிங் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2023ம் வருடம் ஜனவரி மாதம் அஜ்மீர் தர்காவிற்குச் பஸ்ரத் சென்ற போது, அங்கு கொல்கத்தாவைச் சேர்ந்த ஷபானா பர்வீனை (வயது 22) என்பவரை சந்தித்தார்.
அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் ஆதித்யநகரில் உள்ள ஹபீஸ்பேட்டையில் குடியேறினர்.
திருமணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் தங்கள் மாமியாருடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் குடும்பத்தில் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டதால், பஸ்ரத்தும், ஷபானா பர்வீனும் தனியாக வீடு பார்த்து குடியேறினர். இந்த நிலையில் ஷபானா பர்வீன் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி அன்று வீட்டில் வாந்தி எடுக்கத் தொடங்கி ஷபானா பர்வீன்னை, அவரது கணவர் பஸ்ரத் கொண்டாபூரில் உள்ள ராகவேந்திரா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அங்கு இரண்டு நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு ஷபானா பர்வீன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்க விரும்பிய இளைஞர்.. டேட்டிங் ஆப் மூலம் ரூ.6 கோடியை சுருட்டிய பெண்.. சைபர் கிரைம் உஷார்!!
மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததுமே, கணவன் மனைவி இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருமே மருத்துவமனை முன்பு நின்று வாக்குவாதம் செய்தனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால், பஸ்ரத் திடீரென தனது மனைவி பர்வீனைத் தாக்கினார். தெருவில் ஏற்பட்ட கைகலப்பில் கீழே விழுந்த தனது மனைவியை, அங்கே கிடந்த ஒரு பாறாங்கல்லால் தாக்கினார்.
சுமார் 10 முதல் 12 முறை கல்லால் தாக்கப்பட்டதில் ஷபானா பர்வீன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். அவள் இறந்துவிட்டதாக நினைத்து பஸ்ரத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கச்சிபௌலி போலீசார் மூச்சு விட சிரமப்பட்ட பர்வீனை சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஷபானா பர்வீனின் நிலைமை மோசமாக இருந்ததால், குடும்ப உறுப்பினர்கள் அவரை மியாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து நிம்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
தற்போது கோமா நிலையில் இருக்கும் ஷபானா பர்வீன் உயிருக்குப் போராடி வருகிறார். ஷபானா பர்வீனின் குடும்பத்தினர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கச்சிபவுலி போலீசார் பஸ்ரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்ப்பிணி மனைவியை கணவன் கல்லால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!