×
 

24 மணி நேரத்தில் பிரசவம்.. கழுத்தை நெறித்து கர்ப்பிணி கொலை.. கணவனை பிடித்து ஆட்டிய சந்தேகப்பேய்..!

ஆந்திராவில் நிறைமாத கர்ப்பிணியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர ராவ். இவரது மனைவி அனுஷா. இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் மதுரவாடா பி.எம். பாலம் ஊடா காலனியில் தனியாக வசித்து வந்தனர்.

கணவர் ஞானேஷ்வர் ஸ்கவுட்ஸ், சாகர் நகர் வியூ பாயிண்ட் ஆகிய இரண்டு இடங்களில் துரித உணவு மையங்களை நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் தம்பதி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களின் மகிழ்வான குடும்ப வாழ்க்கைக்கு ஆதரமாக அனுஷா கர்ப்பமானார். மிகுந்த சந்தோசம் அடைந்த ஞானேஸ்வர ராவ், மனைவியை நன்றாக பார்த்துக் கொண்டார். 

இந்த நிலையில் 7வது மாத சீமந்தம் மிகச் சிறப்பாக நடந்தது. அக்கம் பக்கத்தினர் மெச்சிய அளவு சீமந்தம் சிறப்பாக நடந்தது. பேறு கால ஃபோட்டோ ஷூட் நடத்தி தம்பதி மகிழ்ந்திருந்தனர். இந்த நிலையில் பிரசவ தேதி நெருங்க நெருங்க ஞானேஸ்வருக்கு அனுஷா மீது சந்தேகம் ஏற்பட தொடங்கியதாக கூறப்படுகிறது. பிரசவ நேரத்தில் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய ஞானேஸ்வர் தொடர்ந்து அனுஷாவிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்து உள்ளார்.

இதையும் படிங்க: அம்மாவே எனக்கு விஷம் கொடுத்தாங்கடா.. ஆந்திராவில் 17 வயது சிறுமி மர்ம மரணம்.. கௌரவ கொலை காரணமா?

இந்த நிலையில் பிரசவத்திற்கு 24 மணி நேரம் இருந்த நிலையில் கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் வாக்குவாதமாக இருந்த கருத்து வேறுபாடு அதன்பின் முற்றி உள்ளது. மனைவியிடம் சண்டையிட்ட ஞானேஸ்வர், வாக்குவாதம் முற்றிய நிலையில் அனுஷா கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அனுஷா உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து அனுஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை உடனடியாக வரச் சொன்னார். 

அனைவரும் அங்கு விரைந்து வந்து அனுஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுஷாவை பரிசோதித்த டாக்டர்கள், அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதனை அடுத்து அனுஷாவின் உடல் விஜயவாடா அரசு பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விஷயம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், நேராக மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் விரக்தியில் கதறி அழுதனர். 24 மணி நேரத்தில் பிரசவம் நடக்கும், தங்களுக்கு பேரனோ? பேத்தியோ? பிறக்க போகிறார் என்ற சந்தோசத்தில் இருந்த அனுசாவின் பெற்றோர், மகள் இறந்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர். மகளின் மரணம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். 

இதனை அடுத்து போலீசார் ஞானேஸ்வரை பிடித்து விசாரித்துள்ளனர். அனுஷா எப்படி இறந்தார் என்பதே ஞானஸ்வர ராவ் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார். பின்னர் போலீசாரின் தனித்துவ கவனிப்பை அடுத்து, தான் அனுஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாக ஞானேஸ்வர ராவ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்திற்கு வெறும் 24 மணி நேரமே இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

இதையும் படிங்க: ஆந்திராவில் கியா தொழிற்சாலையில் 900 இன்ஜின்கள் திருட்டு.. 5 ஆண்டுகளாக திட்டமிட்டு கொள்ளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share