×
 

நள்ளிரவில் மனைவிக்காக புலியுடன் போராட்டம்... கடைசியில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!

நள்ளிரவில் தன் மனைவியை கடித்து குதறிய புலியை தைரியத்துடன் எதிர்த்து நின்று கணவன் போராடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

நள்ளிரவில் தன் மனைவியை கடித்து குதறிய புலியை தைரியத்துடன் எதிர்த்து நின்று கணவன் போராடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் புல்வாரியா கிராமத்தில் சீதாதேவி என்பவர் வசித்து வந்தார். வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் நள்ளிரவில் வனவிலங்குகளில் நடமாட்டம் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் பிப். 25ம் தேதி இரவு அந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

துத்வா காடுகளுக்கு அருகில் உள்ள அந்த கிராமத்தில் நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதாவது கிராமத்தில் வசித்து வந்த சீதா தேவி என்ற பெண்ணின் வீட்டிற்குள் இரைத்தேடி புகுந்த புலி தூங்கி கொண்டிருக்கும் பெண் முன்னாள் நின்று உறுமியுள்ளது. 

இதையும் படிங்க: திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு கத்திக்குத்து.. சொத்து பிரச்சனையால் வெறிச்செயல்.. 17 வயது சிறுவன் கைது..!

சீதா தேவி கண் விழித்து பார்த்ததும் சுதாரித்து கொண்ட புலி அந்த பெண்ணின் மீது பாய்ந்து கழுத்தை கடித்துள்ளது. புலியின் தாக்குதலால் சீதா தேவி அலறியுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த சீதா தேவியின் கணவர் ரத்தன் லால் அலறியடித்து எழுந்துள்ளார். 

அவர் கண் முன் இருந்த காட்சியை பார்த்து மிரண்டுள்ளார். தன் மனைவியை புலி கடித்து குதறுவதை பார்த்த ரத்தன் லால் பயத்தில் செய்வதறியாது திகைத்ததுடன், சீதா தேவையை காப்பாற்ற நினைத்து அருகில் இருந்த கட்டையை எடுத்து புலியின் மீது பலமாக தாக்கியுள்ளார். அதற்கெல்லா அசையாத புலி சீதாதேவியை இரையாக பார்த்து கொண்டிருந்தது. 

உடனே துரிதமாக செயல்பட்ட ரத்தன் லால் வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து புலியை தாக்கியுள்ளார். முகத்தில் வெட்டுக்காயம் பட்ட புலியின் கவனம் ரத்தன் லால் மீது விழுந்தது. ரத்தன் லாலை நோக்கி புலி பாய அதுடன் அவர் போராடியுள்ளார். புலியின் நகக்கீரல்களால் ரத்தன் லால் அலறியதும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தில் கைகளில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு புலியை பிடிக்க முயன்றனர். 

எனினும், கிராம மக்களை பார்த்ததும் மிரண்ட புலி அவர்களையும் தாக்க முற்பட்டது. அனைவரும் புலியை சுற்றி வலைத்து தாக்கியதால் காயமடைந்த புலி கீழே விழுந்தது. இதற்கிடையே புலி தாக்கியதில் படுகாயமடைந்த சீதா தேவி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புலியின் பல் தடம் ஆழமாக பதிந்ததால் சீதாதேவி இறந்ததாக தெரிவித்தனர்.

புலியிடம் போராடியும் தன்மனைவியை உயிருடன் மீட்க முடியாத ரத்தன்லால்க்கு கிராம மக்கள் ஆறுதல் கூறினர். வனப்பகுதியில் ஒட்டி இருப்பதால் கிராமத்திற்குள் வன விலங்குகள் வருவதாக கூறும் மக்கள், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொண்ட இளைஞர்கள்.. போர்க்களமான மயானக் கொள்ளை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share