×
 

வாட்சப் மூலம் தலாக் கொடுத்த கணவன்...அடுத்து மனைவி கொடுத்த அதிர்ச்சி!!

தனது மனைவிக்கு செல்போனில் வாட்சப் மெசேஜ் மூலம் கணவன் தலாக் கொடுத்த சம்பவம் கேரளாவில் நிகழந்துள்ளது.

தனது மனைவிக்கு செல்போனில் வாட்சப் மெசேஜ் மூலம் கணவன் தலாக் கொடுத்த சம்பவம் கேரளாவில் நிகழந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே கல்லூராவி பகுதியை சேர்ந்த 21வயது இளம்பெண்ணுக்கும், நெல்லிக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ரசாக் ஐக்கிய அரபு நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். 

அந்த இளம்பெண் தன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி மனைவியின் தந்தையுடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. அதை அப்துல் ரசாக் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜை பார்த்த பெண்ணின் குடும்பத்தார் அதிர்ந்துள்ளனர்.

ரசாக் அனுப்பி வைத்த மெசேஜில் மூன்று முறை தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி தலாக் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான பெண்ணின் தந்தை தன் மருமகனிடம் செல்போனில் பேசியுளாளர். அப்போது, அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், “ உங்க பொண்ணு எனக்கு வேண்டாம். நான் வாய்ஸ் ரெக்கார்டு மூலம் 3 முறை தலாக் சொல்லிட்டேன்” என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: டென்ஷன்.. டென்ஷன்.. ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய கணவர் கைது..!

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஹோஸ்துர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ என் மாமியார் வீட்டில் சாப்பிட எதுவும் தராமல் என்னை அடைத்து வைத்திருந்தனர். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது கூட மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. ஆனாலும் என் கணவர் என்னிடம் அன்பாக பேசினார்.

அவரின் பெற்றோர் செய்த கொடுமையை சொன்னேன். அதற்கு என்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அதை நம்பி என் நகைகளை அடகு வைத்து என் கணவருக்கு 12 லட்சம் ரூபாயை அனுப்பினேன். பணம் அனுப்பிய பிறகு என் கணவனிடம் இருந்து தலாக் மெசேஜ் வந்துள்ளது” என்று கூறி அந்த பெண் கதறியுள்ளார்.

இது குறித்து பேசிய பெண்ணின் தந்தை, “ என் பெண் வேண்டாம் என்றால் முறைப்படி பெற்றோரிடமோ அல்லது ஜமாத்தாரிடமோ கூறியிருக்க வேண்டும். வாய்ஸ் மெசேஜ் மூலம் தலாக் சொன்னால் எப்படிஏற்று கொள்வது” என்று கேட்டுள்ளார். 

முத்தலாக் முறையை சிலர் இது போன்று தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்துல் ரசாக்கிடம் போலீசார் செல்போன் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share