×
 

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கணவன் நடுரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கிருஷ்ணப்பா. வயது 43. இவருக்கும் சாரதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி கூலி வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர். குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக கணவன், மனைவி இருவருமே கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணப்பாவுக்கு கடந்த சில நாட்களாகவே மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதுகுறித்து கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல் எழுந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தனது மனைவி சாரதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார் கிருஷ்ணப்பா. நேற்று முன்தினம் சாரதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். பிரகதி லே-அவுட் பகுதியில் வந்தபோது, மனைவியை வழிமறித்த கிருஷ்ணா தகராறில் ஈடுபட்டார். கள்ளக்காதலனை சந்தித்திவிட்டு வருகிறாயா எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது.

இதையும் படிங்க: மாணவியின் தந்தையுடன் தொடர்பு.. மிரட்டி பணம் பறித்த ஆசிரியை.. கள்ளக்காதலால் வந்த அவஸ்தை..!

அப்போது தான் கையில் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த கத்தியை காட்டி மனைவி சாரதாவை  மிரட்டினார் கிருஷ்ணப்பா. மேலும் அந்த கத்தியால் மனைவி சாராதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். நடுவழியில் கழுத்தறுபட்டு, ரத்தம் பீய்ச்சி அடிக்க அப்படியே ரோட்டில் விழுந்தார் சாரதா.  ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே, சம்பவ இடத்திலேயே சாரதா உயிர் இழந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சூழ்ந்து கொண்டதும் அங்கிருந்து ஓடி தலைமறைவானார் கிருஷ்ணப்பா.

அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சாலையில் கிடந்த சாரதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர். போலீசாரின் விசாரணையில் சாரதாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை அறிந்த கிருஷ்ணப்பா, கள்ளத்தொடர்பை கைவிட கூறி இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளனர்.

இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட கிருஷ்ணா, நேற்று முன்தினம் இரவு சாரதா வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் அவரை வழிமறித்து கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணாவை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளத்தொடர்பு கணவன் கண்டித்த நிலையில், கள்ளத்தொடர்பை தொடர்ந்த மனைவியை பொது இடத்தில் வைத்து கணவன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குப்பைக்கு வரி.. பெங்களூருவில் இன்று முதல் அமல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share