×
 

ஒர்க் ஃப்ரம் ஹோம் டென்ஷன்… மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன்..!

கணவர் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து, 'உங்கள் மகளின் உடல் சூட்கேஸில் இருக்கிறது' எனக் கூறி உள்ளார்.

கணவன் தன் மனைவியைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ஹுலிமாவு, தொட்ட கம்மனஹள்ளியில் ஒரு சூட்கேஸில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணைக் கொன்றது வேறு யாருமல்ல. அவரது கணவனே. கொலைக்குப் பிறகு, கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி, பின்னர் அதை ஒரு சூட்கேஸில் அடைத்து வைத்தார். அதன் பிறது, கணவர் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து, 'உங்கள் மகளின் உடல் சூட்கேஸில் இருக்கிறது' எனக் கூறி உள்ளார். தற்போது, ​​பெங்களூரு போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரமான சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஒராண்டுக்கு முன்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகேஷ், கௌரி அனில் சம்பேகர் (32) தம்பதியினர் பெங்களூருவின் தொட்டா கம்மனஹள்ளி பகுதியில் ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இங்கு இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால், அவர்களது அண்டை வீட்டினரும் கவலையடைந்தனர். பல முறை அண்டை வீட்டினரின் அவர்களுக்குள் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளனர். ஆனாலும் அவர்களுக்குள் சண்டை நீடித்து வந்துள்ளது.

இதையும் படிங்க: சூட்கேஸில் பெண்ணின் சடலம்.. நாடகமாடிய தாய் - மகள் கைது..! சிக்கியது எப்படி?

இந்நிலையில், இன்று ராகேஷ்  அவரது மனைவி கௌரியைக் கொலை செய்தார். கொலைக்குப் பிறகு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. பின்னர் அதை ஒரு சூட்கேஸில் அடைத்தார். இதன் பிறகு, ராகேஷ் மகாராஷ்டிராவில் வசிக்கும் கௌரியின் பெற்றோருக்கு போன் செய்து, கௌரியை தான் கொலை செய்ததாகக் கூறினார். இதைக் கேட்ட கௌரியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மகாராஷ்டிரா காவல்துறையினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு ஹுலிமாவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்த பிறகே ராகேஷ் கொலை செய்தது அவரது அண்டை வீட்டினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சூட்கேஸிலிருந்து உடல் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சாரா பாத்திமாவும் ஆய்வு செய்தார். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டி.சி.பி சாரா பாத்திமா தெரிவித்தார். இறந்த பெண்ணின் பெற்றோர் பெங்களூருக்கு வருகிறார்கள். அவர்களை விசாரித்த பிறகே முழுமையான தகவல்கள் வெளியாகும்.

இதையும் படிங்க: அலைபாயுதே ஸ்டைலில் திருமணம்.. காதல் மன்னனாக சுற்றிய மாப்பிள்ளை.. கழுத்தை அறுத்துக்கொன்ற மாமியார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share