×
 

இனி அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்... அண்ணாமலையின் ஆக்ரோஷ அரசியல்... அடுத்த அதிரடிக்குத் தயார்..!

எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை.. கஷ்டமான பால் எல்லாம் நயினார் அண்ணன் ஆடிக்குவாரு

"எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை.. கஷ்டமான பால் எல்லாம் நயினார் அண்ணன் ஆடிக்குவாரு..." அண்ணாமலை என பேசியதால் அரங்கமே அதிர்ந்தது.

சென்னையில் நடந்த ஜனம் தொலைக்காட்சி இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய பாஜக நிர்வாகி அண்ணாமலை, ''மாநிலத் தலைவர் என்ற சுமை எனக்கு இனி இல்லாததால் "அண்ணாமலையாக எனது கருத்துக்களை நான் சுதந்திரமாக சொல்ல முடியும்" இனி பக்குவமாக பேசுவது, கஷ்டமான பந்துகள் அடிப்பது போன்றவையை நயினார் அண்ணன் பார்த்துக்கொள்வார். என் வேலை, இனி களத்தில் இறங்கி சிக்சர் அடிப்பது தான்.

 

இனி நான் ஃப்ரீயாக லிபரலாக பேசுவேன். ஏனென்றால் முன்பு எனக்கு பொறுப்பு என்கிற கட்டுப்பாடு இருவ்தது. அடித்து ஆடக்கூடிய பாக்சர்கள் எப்போதுமே ஒரு அரசியல் கட்சிக்கு தேவை. ஆகையால் என் பேச்சின் ஸ்டைலை மாற்றி விடுவேன். இனி பக்குவமாக பேசுவதற்கு நைனார் அண்ணன் இருக்கிறார். கூட்டணியை பற்றி நீங்கள் ஒன்று சொன்னீர்கள்... அவர்கள் ஒன்று சொன்னார்கள்... அவரிடம் பேசிக் கொள்ளுங்கள். நம்ம பாலை மட்டும் நாம் அடித்தால் போதும்.

 நமது பாலை மட்டும் அடித்தால் போதும். பவுன்ஸர், டிபன்ஸ் பால்களை எல்லாம் நைனார் அண்ணன் பார்த்துக் கொள்வார். ஒன்லி சிக்ஸ் அடிப்பது மட்டும்தான் நமது வேலை. 40% நாம் பார்க்க வைக்க வேண்டும். அப்போதுதான் மானிடைசேசன் ஆகும். அதற்கு இவர்கள் பட வேண்டிய கஷ்டம் மிகவும் அதிகம். இன்றைக்கு மீடியா என்பது மிகவும் மாறிவிட்டது.  அமமுக பொதுச்செயலாளர் நேற்று மருத்துவமனைக்கு செல்வதாக 2 நாட்களுக்கு முன்பாகவே கூறிவிட்டார்.

டிடிவி தினகரன் அண்ணாவின் இதயம் நல்ல இதயம் என்று அனைவருக்கும் தெரியும். அதனை மருத்துவர்களே சான்றிதழ் கொடுத்து உறுதி செய்துள்ளனர். நீங்கள் அற்புதமான மனிதர் என்று பழகி பார்த்த அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்''எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share