×
 

வானிலை மையம் வெளியிட்ட கூல் நியூஸ்.. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்த நிலையில், அடுதடுத்த நாட்களில் வெப்பநிலையானது அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில் தற்போது மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் பகுதியில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மேற்கு பகுதியில் காற்று சந்திப்பும் நிலவுவதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்ன?

 மேலும் வருகின்ற 24-ஆம் தேதி வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ள நிலையிலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் பக பகல் நேரத்தில் வெப்ப நிலையானது இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share