×
 

ஆஸ்திரேலியாவில் 5 பெண்கள் பாலியல் பலாத்காரம்... இந்திய மத தலைவருக்கு 40 ஆண்டுகள் ஜெயில்..!

ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய மத தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்து மத தலைவர் ஒருவர் கொரியா நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிறைவகம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு குடும்பத்தினரை சந்திப்பதற்கான எந்தவித பரோலும் வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (வயது 43), இவர் அந்நாட்டின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டதுடன் பாரதிய ஜனதா கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வாகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்கர் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலைத் தேடி வந்த பெண்களை சிட்னி நகரத்திலுள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிங்க: சிறுவன் கையில் துப்பாக்கி, வெடிகுண்டுகள்... அதுவும் விமானத்தில்... என்ன நடந்தது..?

மேலும், அவரது இந்த குற்றங்களை விடியோ பதிவு செய்ததுடன், தனது கணிணியில் எக்ஸ்ல் சீட்டு ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பளித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர் எனவும் இந்த குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்கநிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாவது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், சிட்னியிலுள்ள டௌனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதில், முதல் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் அவருக்கு 2053 ஆம் ஆண்டு வரை பரோல் வழங்கப்படாது எனவும் தண்டனை காலம் முடிந்து தனது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறுத்தப்பட்ட போது நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த தன்கர் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை. அமைதியாக காணப்பட்டார். 

இவர் ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ, டொயோட்டா மற்றும் சிட்னி ட்ரெயின்ஸ் ஆகிய நிறுவனங்களில் 'டேட்டா விசுவலைசேஷன் கன்சல்டன்ட்'டாகவும் பணிபுரிந்து இருக்கிறார். கடந்த 2006 ஆம் ஆண்டில் மாணவராக ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர், தன்கர்.
 

இதையும் படிங்க: ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share