×
 

2028-ம் ஆண்டு வரை ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு.. அரசுப்பள்ளிகளுக்கு இலவச இணையவசதி...நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

2025 பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி முதல்முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் சுதந்திர தினத்தின் போது ஆற்றிய உரையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இனி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் சுத்தமான குடிநீரை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்கிறது என்றும் இதற்காக ஜல்ஜீவன் என்றொரு திட்டத்தை கொண்டு வருவதாகவும் அறிவித்து இருந்தார்.

அதாவது நாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வது ஜல் ஜீவன் திட்டமாகும். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு கோவா மற்றும் தாதர் ஹவேலி ஆகியவை 100 சதவிதம் ஜல்ஜீவன் திட்டம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. தெலங்கானா, மிசோரம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், அரியானா, பஞ்சாப், குஜராத், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து 100 சதவித பணிகளை நிறைவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடி பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 கோடி கடன்.. நிர்மலா சீதாராமனின் அசத்தல் அறிவிப்பு..!

மிஞ்சிய மாநிலங்களில் 80 சதவிதம் முதல் 90 சதவிதம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முழுமையாக பணிகளை நிறைவு செய்ய இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதனை பிரதிபலிக்கும் விதமாக ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதேபோன்று பலரும் மறந்துவிட்ட தபால்துறையை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தபால் துறையை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி நாட்டில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் சரக்கு போக்குவரத்தை கையாளும் வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

கிராமப்புறங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இலவச இணைய சேவை தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்பதும் அவர் அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இதையும் படிங்க: நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி! ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரியில்லை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share