×
 

ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை... தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்...!

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 1990  முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசிடமிருந்தும் ரிசர்வ் வங்கியிடமிருந்தும் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து ஒரு கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ரூபாயை சட்ட விரோதமாக பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம் ஷேக் மற்றும் முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா,  எஸ்.ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்தது. சையது நிசார் அகமது உள்ளிட்ட மற்றவர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க: சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது.. ஐகோர்ட் அதிரடி..!

 இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ரம்ஜான் நோன்பு காலம் நடந்து வருவதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி சீமான் நடத்தும் பேரணி.. அனுமதி தருவது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share