கார்த்தியால் ராஜராஜன் யாரை சந்தித்தார் தெரியுமா? மாயாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜனுக்கு கார்த்திக் தன்னுடைய தங்கையின் மகன் என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா வீட்டில் மாயாவும் மகேஷும் திட்டமிட்டபடியே அந்த ட்ரைவரை ஊரை விட்டு துரதியாச்சு என்று நினைத்து சந்தோசப்படுகின்றனர்.
மறுபக்கம் கார்த்தியை சந்தித்த ராஜராஜன் என் தங்கச்சி பையனா நீ என்று மிகுந்த சந்தோசப்படுகிறார். நானே உன்னை ஊரை விட்டு போக சொல்ற மாதிரி பண்ணிட்டேனே என்று வருத்தப்படுகிறார். மன்னிப்பு கேட்கிறார்.
இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக ரத்னாவை நெருங்கிய வெங்கடேஷ்! முத்துப்பாண்டியின் தரமான சம்பவம் - அண்ணா சீரியல் அப்டேட்!
அடுத்ததாக கார்த்திக் ராஜராஜனையும் பாட்டி பரமேஸ்வரியையும் சந்திக்க வைக்கிறான். 25 வருடங்களுக்கு பிறகு அம்மாவை சந்தித்த ராஜராஜன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண் கலங்குகிறார். பரமேஸ்வரி பாட்டி பெத்த புள்ளையை பார்த்துட்டேன் என்று சந்தோசப்படுகிறாள்.
அதனை தொடர்ந்து ராஜராஜன் கார்த்தியிடம் நான் தானே நீ ஊரை விட்டு போக காரணமாகிட்டேன். பஞ்சாயத்தில் வைத்து நான் பொய் சொல்லிட்டேன் என்று சொல்லி உன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் கார்த்திக் வேண்டாம் மாமா என்று ராஜராஜனை தடுத்து நிறுத்துகிறான், மேலும் ஊருக்குள் மீண்டும் வர வேற வழி இருக்கு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதையும் படிங்க: அழகில் சிறைபிடிக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரனின் போட்டோஸ்!