கொடுக்கல் வாங்கலில் தகராறு; பைனான்ஸியரின் முதுகை துளைத்த புல்லட் ... காட்பாடியில் துப்பாக்கிச்சூடு...!
பைனான்ஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் அருள் சுடர் என்பவர் துப்பாக்கியால் சுட்ட ஜான்சனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைனான்ஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் அருள் சுடர் என்பவர் துப்பாக்கியால் சுட்ட ஜான்சனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அடுத்த வஞ்சூரை சேர்ந்தவர் பைனான்ஸ் தொழில் செய்யும் அருள் சுடர் (49) இவர் நேற்று முன்தினம் (11.03.2025) இரவு 9.30 மணி அளவில் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் திருமணம் அருகில் பைனான்ஸ் வசூலிக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் வஞ்சூரை சேர்ந்த ஜான்சன் (52) என்பவரால் கம்பியால் குத்தப்பட்டதாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கி குண்டுகளை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி முறைகேடு... டாஸ்மாக் ஊழலில் யாருக்கெல்லாம் நேரடி தொடர்பு... புட்டு, புட்டு வைத்த அமலாக்கத்துறை...!
இதுகுறித்து விருதம்பட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தும், இது குறித்து வழக்கு பதிவு செய்தும் தற்போது சம்பவ இடத்தில் ADSP தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டு அடி பட்டவரும், துப்பாக்கியால் சுட்டவரும் இருவருமே நண்பர்கள் என்றும் தொழில் செய்வதற்காக ஒரே வீட்டை வாடகை எடுத்துள்ளனர்.இவர்களுக்கு தகராறில் நடந்ததாக கூறப்படுகிறது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஜான்சனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் உள்ள அருள் சுடரையும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து ஓட்டுநருடன் தகாத உறவில் கல்லூரி மாணவி: கட்டிப்படித்தபடி துள்ளத் துடிக்க சாவு..!