×
 

‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

டிஜிட்டல் கல்வியறிவு இலக்கை கேரள மாநிலம் முழுமையாக எட்டி நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

டிஜி கேரளா எனும் டிஜிட்டல் கேரளா திட்டத்தை மாநில அரசு, சுய உதவிக்குழுக்கழுடன் சேர்ந்து செயல்படுத்தியது. இதில் 21 லட்சம் மக்கள் பங்கேற்ற நிலையில் அனைவரும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றுள்ளனர். 

கேரள எஸ்எஸ்ஜி அமைச்சர் எம்.பி. ராஜேஷ் கூறுகையில் “கேரள மாநிலம் டிஜிட்டல் கல்வியறிவில் முழுமையான  இலக்கை அடைந்துவிட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்துவிட்டால் அதிகாரபூர்வமாக கேரள அரசு அறிவிக்கும்.

இதையும் படிங்க: கேரளாவில் வரலாற்று நிகழ்வு.. ‘அனைத்து சமூகத்தினரும்’ வழிபட பிரபல கோயில் கதவு திறப்பு..!

மத்திய அரசின் டிஜிட்டல் கல்வியறவுக்கான தேசிய டிஜிட்டல் கல்வியறிவு இயக்கம் வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை வைத்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தேவையான கல்வியறிவு, டிஜிட்டல் கல்வி பயிற்சிகளை வழங்கியுள்ளோம். இந்த திட்டத்தில் முதியோர் மட்டுமல்ல அனைத்து வயதினரும் சேரலாம். இந்த டிஜி கேரளா திட்டம் முதலில் 2022ல் புள்ளம்பரா கிராம பஞ்சாயத்தில் தொடங்கப்பட்டது. 

இந்த கிராமத்தில் ஏராளமானோர் முதன்முதலில் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தப் பழகினர். மொபைல் போனில் வாய்ஸ்கால், வீடியோ கால் செய்து பழகினர். வாட்ஸ்அப்பில் செய்தி பரிமாற்றம், ஸ்மார்ட்போனை சிறப்பாக பயன்படுத்துதல், இணையவழி வங்கி சேவையை பயன்படுத்துதல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக ஒவ்வொரு வார்டிலும் சர்வே நடத்தப்பட்டு 21.88 லட்சம் பேர் டிஜிட்டல் கல்வியறிவுக்காக தேர்ந்தெடுத்தார்கள். 2.57 லட்சம் தன்னார்வலர்கள், தேசிய  சேவைதிட்டம் உறுப்பினர்கள், குடும்பஸ்ரீ உறுப்பினர்கள், கேரள மாநில கல்வியறிவு இயக்கம், நூலகக் குழுவினர், இளைஞர்கள் அமைப்பினர் களத்தில் இறங்கி, வீடுகளுக்கே சென்றும், 100 நாட்கள் வேலைத்திட்டம் நடக்கும் இடத்துக்கும், பக்கத்து தெரு, வீடுகளுக்கு நேரில் சென்று டிஜிட்டல் கல்வியறிவை வழங்கினர்.

இந்தத் திட்டம் நிறைவடைந்தபின், பயிற்சி பெற்றோர் சிறிய தேர்வு மூலம் மதிப்பிடப்பட்டனர். இதில் 98சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 3வது தரப்பில் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டதில் 98 சதவீதம் சரி என வந்தது. இணைய வசதி இல்லாதவர்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சியளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் கல்வியறவை முடித்த 67வயது சரசம்மாள், மூவாற்றம்புழா நகரைச் சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் தங்களின் ஸ்மார்ட்போன் மூலம் தங்களின் பேரன்,பேத்திகள், உறவினர்களுக்கு வீடியோ கால், வாய்ஸ் கால் செய்து எளிதாகப் பேசுகிறார்கள், யூடியூப் பார்த்து மகிழ்கிறார்கள், வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல்கள் பரிமாறுகிறார்கள்.  அனைத்துக்கும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம்தான் காரணம்.

இதையும் படிங்க: எதிர்த்தாலும், முதல்ல அமல்படுத்துவோம்..! வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share