×
 

எலி மருந்து ஸ்ப்ரேயால் வந்த வினை.. மாறி மாறி முகத்தில் ஸ்ப்ரே அடித்து விளையாடிய சிறுவர்கள்.. பதறிப்போன பெற்றோர்..

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விளையாட்டு பொருள் என நினைத்து முகத்தில் மாறி மாறி எலிமருந்து ஸ்ப்ரே அடித்துகொண்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு.  இவரது மகன் ரிசிகேஸ்.வயது 6. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
ரிஷிகேஷ் நேற்று பள்ளி முடிந்ததும், தனது தோழர்களான அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் ரித்திக். வயது 6. வீரப்பன் என்பவரது மகன் கருப்பசாமி. வயது 5. பரமசிவம் என்பவரது மகன் தனபிரியன் வயது 5. ஆகியோருடன் தனது வீட்டிற்க்கு பின்புறம் விளையாடி உள்ளான். இதில் ரிஷிகேசும், ரித்திக்கும் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். மற்ற இருவரும் எல்.கே.ஜி மாணவர்கள் தான்.

நான்கு பேரும் கையில் கிடைத்த பொருட்களை வைத்து விளையாடி உள்ளனர். அப்போது அப்பகுதியில் கிடந்த காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக் கொல்லி ஸ்பேரேயை எடுத்து கையில் வைத்து விளையாடியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவர்கள் 4 பேரும் அந்த ஸ்ப்ரேயை மாறி, மாறி முகத்தில் அடித்து கொண்டதாக விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அந்த எலிக் கொல்லி ஸ்பிரேயின் நுரையும் அந்த சிறுவர்களின் வாயில் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. சிறுவர்கள் ஏதோ வைத்து விளையாடுவதை பார்த்த சிறுவர்களின் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோருக்கும் தகவல் சொல்லி உள்ளானர். 4 சிறுவர்களின் பெற்றோரும் பதறிப்போய், உறவினர்கள் உதவியுடன், உடனடியாக சிறுவர்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதையும் படிங்க: மகாகும்பமேளாவில் புனித நீராட நாளையே கடைசிநாள்... 45 நாள் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது....

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர்களை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு தொடர்ந்து சிறுவர்களை மருத்துவர்கள் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 2 எல்கேஜி மாணவர்கள் என 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவர்களிடம் கேட்கையில், தொடர்ந்து சிறுவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் எலி விஷம் என்பதால் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை மாணவர்களின் வயிற்றுக்குள் எலிவிஷம் சென்றிருந்தால் கல்லீரல் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தனர். குழந்தைகளிடம் இது போன்ற விஷத்தன்மை உள்ள பொருட்களை கொடுக்காமல் அவர்களுக்கு கிடைக்காமலும் பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுபோன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை சமூக பொறுப்பில்லாமல் ரோட்டில் வீசிச்சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற எலிக் கொல்லி, கொசு விரட்டி போன்ற உயிருக்கு ஆபத்தான பொருட்களை முறையாக குப்பை தொட்டியில் போட்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டு இருக்காது எனவும், பொதுமக்களின் சிறிய அலட்சியம், இது போன்ற விபரம் தெரியாத சிறுவர்களின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் கூறினர். 

இதையும் படிங்க: இது இன்ப தமிழ்நாடு, இங்கு ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு! தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share