×
 

சென்னையை போன்று குமரியிலும் 28 சவரன் நகை கொள்ளை அடித்த பெண் கைது..

குமரியில் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய பெண்னை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவாதங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியரான சுஜிகுமார் - ஸ்டெல்லாவின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இருவரும் தனித்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் புஷ்பம் என்ற பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சுஜிகுமார் ஸ்டெல்லா தம்பதியினரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!

அப்போது வீட்டில் இருந்த 28 சவரன் நகை தங்க நகையை புஷ்பத்திடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.  இந்த நாளையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய தம்பதியினர், புஷ்பத்திடம் நகையை திருப்பி கேட்டுள்ளனர். 

அப்போது புஷ்பம் தன்னிடம் நகை ஏதும் கொடுக்கவில்லை என்று கூறிவிட்டு மறுநாளில் இருந்து வேலைக்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வயதான தம்பதியினர் புகார் அளிக்கவே, வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உறவினர் வீட்டில் தலைமறைவான புஷ்பத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 28 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளுக்கு இலவச பேருந்து சேவை - அமைச்சர் அதிரடி அறிவிப்பு! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share