×
 

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டு சிறை.. போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

கேரளாவில் கொரோனா காலக்கட்டத்தில் 2 ஆண்டுகள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதரசா ஆசிரியருக்கு போக்சோ நீதிமன்றம் 187 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அலக்கோடு பஞ்சாயத்தில் உள்ள உதயகிரியைச் சேர்ந்தவர் முகமது ரஃபி. வயது 41. மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது அதே பகுதியை சேர்ந்த 7 வது படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறிய வயதில் நடந்தது என்னவென்றே அறியாத சிறுமி அச்சத்தில் உறைந்துள்ளார். அதை பயன்படுத்திக் கொண்ட ரஃபி, தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்து வெளியில் சொன்னால் சபித்து விடுவதாகவும் ரஃபி அந்த சிறுமியை மிரட்டி உள்ளான். இதன் காரணமாக அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளாள்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய இந்த பாலியல் வன்கொடுமை, 2021 டிசம்பர் வரை தொடர்ந்துள்ளது. ரஃபியின் தொடர் பாலியல் தொல்லைகளால் அந்த சிறுமி மனதளவில் சோர்வடைந்தாள். இது சிறுமியின் அன்றாட நடவடிக்கைகளை பாதித்தது.

சிறுமியின் படிப்பிலும் எதிரொலித்தது. சிறுமியின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாவதை பார்த்த அவரது பெற்றோர், இதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால் ரஃபியின் மிரட்டலுக்கு பயந்திருந்த சிறுமி, இதுகுறித்து அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. 

இதையும் படிங்க: தொட்டு அளவெடுத்த டெய்லர்.. சங்கடத்தில் நெளிந்த மாணவி.. தட்டிக்கேட்காத ஆசிரியர், டெய்லர் போக்சோவில் கைது..!

சிறுது நாளில் சிறுமியின் நிலை மிகுந்த மோசமடையவே, சிறுமியை அவரது பெற்றோர், மனநல மருத்துவர் ஒருவரிடம் கவுன்சிலிங் அழைத்து சென்றுள்ளனர். டாக்டரும் சிறுமியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு கொடுத்து நடந்ததை விசாரித்துள்ளார். டாக்டரிடம் மனம் திறந்து பேசிய அந்த சிறுமி, முழுதாக தனக்கு நேர்ந்த துயரம் குறித்து எடுத்து சொல்லி அழுதுள்ளார். சிறுமியின் நிலையை பார்த்த டாக்டர், இதுகுறித்து சிறுமியின் பெற்றோரை அழைத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், முகமது ரஃபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இந்த முகமது ரஃபி மீது ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு இருந்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஃபி பரோலில் வெளியான நிலையில்தான் இந்த குற்றம் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தலிபரம்பா போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. 

இந்த வழக்கில், நீதிபதி ஆர்.ராஜேஷ் இன்று தீர்ப்பளித்தார். போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஏழு பாலியல் குற்றங்களில் ரபி குற்றவாளி என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவின் கீழ் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மொத்தம் ரூ.9.10 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஷெரிமோல் ஜோஸ் கூறியதாவது: தண்டனைகள் ஒரே நேரத்தில் நீடிக்கும் என்பதால், ரபி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார், என்றார். ஏற்கனவே, மதரஸாவில் மற்றொரு மைனர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முகமது ரபி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் பணியிட மாற்றம்.. ஆசிரியர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share