சிறைக்குள் வந்த திரிவேணி சங்கமம்.. பாவங்களை போக்க புனித நீராடிய 90,000 கைதிகள்..!
உத்தரபிரதேசத்தில் உள்ள சிறைகைதிகளுக்காக திரிவேணி சங்கமத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீரில் 90 ஆயிரம் கைதிகள் இறைவனை வணங்கியபடி புனித நீராடி மகிழ்ந்தனர்.
மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாக நடந்து வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி கும்பமேளா கோலாகலமாகத் துவங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டுள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச அமைச்சர்கள் உட்பட ஏராளாமான அரசியல் தலைவர்கள் இதில் புனித நீராடி உள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் குளிப்பதை லைவ் வீடியோ செய்த கொடூர அரக்கர்கள்.! கும்பமேளாவில் அட்ராசிட்டி.. டெலிக்ராம் சேனல் முடக்கம்..!
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலச் சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அயோத்தி, அலிகார் சிறைகளுக்குக் கொண்டு வந்தனர். உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் நீராடினர். திரிவேணி சங்கமத்தி இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அது வழக்கமாக கைதிகள் குளிக்கும் நீரில் கலக்கப்பட்டது. கைதிகளிம் குளியல் நீர் தொட்டியில் மலர்கள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கைதிகள் புனித நீராடவும், சிறையிலேயே பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினார்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான், சுமார் 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடினர். கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். லக்னோ சிறையில் 757 கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் புனித நீராடினர். மேலும், அவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் புனித நீராடியதாக சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது மகா கும்பமேளா இல்ல... மரண கும்பமேளா.. யோகி ஆதித்யநாத் மீது மம்தா பானர்ஜி ஆவேச தாக்குதல்.!