#getoutravi.. நஞ்சை மனதில் சுமந்தால் எப்படி சட்டத்தை மதிப்பார்..? மனோ தங்கராஜ் விமர்சனம்..!
கல்லூரி மாணவர்களை ஜெய் ஶ்ரீராம் என கோஷம் எழுப்ப வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த நிலையில் துரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி மதவெறிக் கூச்சல்.. பதவியை விட்டு உடனே தூக்குங்க... கி.வீரமணி ஆவேச தாக்கு.!!
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்ப வைத்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கும் ஆளுநரே திரும்ப போ என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 மசோதாவில் இப்படியொரு சிக்கலா..? மேல்முறையீட்டுக்குப் போனால் திமுகவின் ஆட்டம் மொத்தமும் காலி..!