மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..
மச்சான் என அழைத்ததற்காக நண்பரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் அருண் என்பவரும், காரனோடையைச் சேர்ந்த விஜயகுமாரும் நண்பர்கள். தனக்கு சகோதரிகள் உள்ளதால், விஜயகுமார் தன்னை மச்சான் என அழைப்பதற்கு அருண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அருண் மீது ஆத்திரமடைந்த விஜயகுமார், கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அருணின் வீட்டுக்கு, அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார்.
கொடுங்கையூர் போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சென்னை 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், விஜயகுமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: பிளாக் மெயில் செய்த காதலன்...! உல்லாசத்தின் போது கதையை முடித்த காதலி.! பகீர் ரிப்போர்ட்
இதையும் படிங்க: நிறைய லீவு போட்டா எக்ஸாம் எழுத முடியாது.. திட்டவட்டமாக கூறிய நீதீமன்றம்..