காதல் கசக்குதய்யா.. 5 நாளில் புளித்துப்போன இன்ஸ்டா காதல்.. கழட்டி விட நினைத்த ராணுவ வீரரை ரவுண்டு கட்டிய பெண் வீட்டார்..!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, தாலி கட்டி, 5 நாள் குடித்தனம் நடத்திய பெண்ணை கழட்டி விட நினைத்த ராணுவ வீரரை பெண் வீட்டார் ரவுண்டு கட்டி வெளுத்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த நெடுங்கள் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்னி பாத் மூலமாக ராணுவத்தில் சேர்ந்துள்ளார். தற்போது மத்திய பிரதேஷ் ஜெப்பல்பூர் எனும் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். பணி நேரம் போக மீதி நேரம் எல்லாம் மொபைலில் கழிக்கும் பெரியண்ணனுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் இரவு பகல் பாராமல் சாட்டிங்கில் மூழ்கி உள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இளம் காதலர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமே தங்களது அன்பை ஆன்லைன்னில் பரிமாறிக் கொண்டு இருந்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் சாட்டிங் போதும், இனி மீட்டிங் செய்து டேட்டிங்கில் இறங்கலாம் என தீர்மானித்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே இளம்பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துள்ளது. இவர்கள் நம் காதலை பிரித்து விடுவார்கள் என அஞ்சியதாக instagram காதலன் பெரியண்ணனுக்கு அந்த இளம் பெண் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவசரம் அவசரமாக 15 நாள் விடுப்பில் ஊருக்கு வந்த பெரியண்ணன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் கூறியுள்ளார். ஊருக்கு வந்த கையுடன் போச்சம்பள்ளிக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: சாமி கும்பிட வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... காமுகன்களை சுட்டுப்பிடித்த காவல்துறை...!
கடந்த 28ஆம் தேதி அந்த இளம்பெண்ணை அவரது நண்பர் உதவியுடன் அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ஒரு கோவிலில் இளம்பெண்ணிற்கு தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த கையுடன் ஹனிமூன் கொண்டாட ஊட்டிக்குச் சென்று காதல் ஜோடி, அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி தங்களது தேன் நிலவையும் கொண்டாடியுள்ளனர். நான்கு நாட்கள் முடிந்த நிலையில் பெரியண்ணனுக்கு காதல் கசந்துள்ளது. ஹனிமூனும் போர் அடிக்கவே இளம்பெண்ணை, தனது ஊருக்கு அழைத்து வந்துள்ளார் பெரியண்ணன். ஆனால் பெரியண்ணன் குடும்பத்தினர் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாவில்லை. அந்த இளம்பெண்ணை விட்டுவிட்டு வரும்படி கூறி சண்டையிட்டுள்ளனர்.
இதனால் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டு, அவரது வீட்டில் விட்டுவிட சென்றார் பெரியண்ணன். தற்போது தனக்கு விடுமுறை முடிந்து விட்டதாகவும், அடுத்த விடுமுறைக்கு வரும் போது இரண்டு குடும்பத்தையும் சமாதானம் செய்தி திருமணம் நடந்த்தி வைப்பதாகவும் கூறி உள்ளார். எனினும் தனது ஊருக்கு திரும்பும் முன்னே அந்த இளம்பெண் இதுகுறித்து உறவினருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. போச்சம்பள்ளி வந்ததும், காரோடு சேர்த்து மணமகன் பெரியண்ணணை ரவுண்டு கட்டிய மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு போலீசாரின் விசாரணையில் ராணுவ வீரர் பெரியண்ணன் இனி அந்த பெண்ணுடன் வாழ முடியாது என்று கூறி காவல் நிலையத்தில் அடாவடி செய்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களது புகார் குறித்து விசாரணை நடந்தது. அப்போது இளம்பெண்ணுடன் 5 நாட்கள் குடித்தனம் நடத்தி உள்ளாய். அது மருத்துவ பரிசோதனையில் தெரியவரும். பாலியல் வன்கொடுமை வழக்கில் உள்ளே தூக்கி வைத்துவிடுவோம் என மகளிர் போலீசார் மிரட்டி உள்ளனர்.
மகனின் மத்திய சர்க்கார் வேலையும் போய் விடும், மகனும் கைது செய்யப்படுவான் என அஞ்சிய பெரியண்ணனின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மீண்டும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய பெரியண்ணன், அடுத்த விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது ஊர்கூட்டி திருமணம் செய்வதாக கூறி பெண்ணை தனது வீட்டுற்கு அழைத்து சென்றார்.
இதையும் படிங்க: திடீர் துப்பாக்கிச்சூடு.. இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தப்பியோடியவர்களை சுட்டுப்பிடித்த போலீசார்..!