ஆயுள் தண்டனையே போதும்..! எதிர்பார்க்காத உத்தரவை அளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!
உடப்பன் குளத்தில் நிகழ்ந்த மூவர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள உடப்பன்குளம் கிராமத்தில், இறந்தவரின் உடலை குறிப்பிட்ட தெரு வழியாக எடுத்துச் செல்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், 2014 ஆம் ஆண்டு மே 31-ம் தேதி இரவு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர், அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, கண்ணன், முத்துசாமி, காளிராஜ், கண்ணன், பாலமுருகன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆசையாய் நூடுல்ஸ் வாங்கி வந்த கணவன்.. சண்டையிட்டு சாப்பிட மறுத்த மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற விபரீதம்..!
இந்த வழக்கு நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதுடன், பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 25 பேரில் மற்ற 11 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, சுரேஷ், உலக்கன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தியதையடுத்து, மீதமுள்ள 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
4 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டதுடன், இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. அப்போது, குற்றத்தின் தன்மை தூக்கு தண்டனை விதிப்பதற்கு போதுமானதாக இல்லை என கூறி தூக்கு தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனைக்காக குறைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ரவுடி கொலை வழக்கு.. 3 மாதம் திட்டம் தீட்டி ரவுடியை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!