×
 

முதல்முறையாக சட்டசபையில் நயினார் நாகேந்திரன்.. சபாநாயகர், எம்எல்ஏக்கள் வாழ்த்து மழை..!

முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவும் மற்றும் எம்எல்ஏக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழக பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வானார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவர் தலைவராக பதவியேற்று கொண்டார்.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்களும் வாழ்த்து கூறினர். 

இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு முதன்முறையாக சட்டசபைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share