கொச்சை வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்த சீமான்... பெரியார் குறித்த கேள்வியால் உச்சக்கட்ட கோபம்...!
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இப்படி பீப் போடும் அளவிற்கு ஆபாச வார்த்தைகளுடன் சீமான் பேசியிருப்பது காண்போரை முகம் சுழிக்க வைப்பதாக அமைந்துள்ளது.
சீமான் பிரஸ் மீட் என்றாலே கோபமும், கொந்தளிப்பும் நிறைந்த பதில்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ப்ளோவில் சில கெட்ட வார்த்தைகளும் வரும் என்பது போல் சீமான் பெண் செய்தியாளரிடம் முகம் சுழிக்கும் வகையில் ஆவேசத்துடன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரியாரை பற்றியோ அம்பேத்கரை பற்றியோ சீமான் அவர்கள் முழுமையா படிக்கவில்லை அதனால் தான் இப்படியான விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள் என கேட்டதற்கு, “பைத்தியக்காரன் தான் அப்படிச் சொல்லுவான் அம்பேத்கரை முழுமையா படிச்சவன், பெரியாரோட ஒப்பிடுவானா?. சூத்திரன் யாருன்னு அம்பேத்கர் சொன்னதுக்கும், பெரியார் சொல்றதுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கு. இந்த நிலப்பரப்பில் 85 சதவீத்தில் இருப்பவர்களை சூத்திரன் என்கிறார்கள். யார் தமிழனை மட்டுமே சூத்திரம் என பட்டம் கட்டியது ஏன்?. சாஸ்திரத்தில் தமிழன் மட்டுமே சூத்திரன் என எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கா? என கேள்வி எழுப்பினார்.
பெரியார் எப்போது மேடையில் ஏறினாலும் பெரியவர்களே, தாய்மார்களே என்ற வார்த்தையைத் தொடர்ந்து, முன்னாடி அமர்ந்திருக்கும் சாமானிய மக்களின் பிறப்பை கொச்சைப்படுத்துவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் என அந்த வார்த்தையைக் குறிப்பிட்ட சீமான், அப்போதே கல்லையும் செருப்பையும் கொண்டு அடித்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என ஆவேசமாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: “நான் பிரபாகரனைச் சந்திக்கவே இல்லை” ... சீமான் அடித்த திடீர் பல்டி - காரணம் என்ன?
பெரியார் பற்றி நீங்கள் தொடர்ந்து விமர்சிப்பதால் தான் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் திமுகவில் இணைந்ததாக கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு, “அதுல சேர்ந்த எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்னும் கூட கொஞ்ச பேரை அனுப்பி வைக்கிறேன் சேர்த்துக்கோங்க என சிரித்த முகத்துடன் பேசியவர் பெரியார் பற்றி கேட்டதுமே, இங்க பெரியாரை முன்னிறுத்தி பின்னாடி ஒழிஞ்சிருக்க வேண்டிய தேவை திராவிடர்களுக்கு இருக்கு. அதனால் நீங்களே தயவு செஞ்சி பெரியாரை வச்சிக்கோங்க. அப்படியே அவரோட சிலையை எடுத்துக்கிட்டு போய் வீடு, வீடாக வாக்கு கேளுங்கள். பெரியார் படத்தைக் கொடுத்து ஓட்டு கேளுங்கள், காந்தி படத்தை கொடுத்து ஓட்டு கேட்காதீர்கள். எங்களுக்கு பெரியார் தேவையில்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால் கோவில்ல கொண்டு போய் கூட வச்சிக்கோங்க. அனுதினமும் ஐந்து வேளை பூஜை செய்யுங்கள். கிடா வெட்டி பொங்கல் கூட வையுங்க, எங்களுக்கு பெரியார் தேவையில்லை” என காட்டமாக பதிலளித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இப்படி பீப் போடும் அளவிற்கு ஆபாச வார்த்தைகளுடன் சீமான் பேசியிருப்பது காண்போரை முகம் சுழிக்க வைப்பதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சீமான் கதறக் கதற... தம்பிகள் பதறப் பதற... நாதகவில் இருந்து 3000 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக..!