×
 

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு..! ரூ.600 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!

நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கில் 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் ஒவ்வொரு மாதமும் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக முதலீடு செய்து ஏமாந்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர்.

அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்ததுடன், இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டது. மேலும் விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் 92 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்த நிலையில் தலைமை இயக்குனர்களில் ஒருவரான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரசக்தி மற்றும் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரான பாலசுப்ரமணியன், பாலசுப்பிரமணியத்தின் மகள் லாவண்யா ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு துணை கைது செய்தனர்.

இதையும் படிங்க: நில பேர மோசடி: ப்ரியங்கா கணவருக்கு சம்மன்... வாயைவிட்ட வதேராவை சுத்துப்போட்ட ED..!

ஏற்கெனவே 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை... வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share