×
 

கைலாசாவை விரிவுபடுத்த தில்லாலங்கடி: பொலிவியாவில் 4.8 லட்சம் ஏக்கரை அபகரித்த நித்யானந்தா..!

நித்யானந்தா அந்தப் பகுதியையும் கைலாசாவின் நாடாக இணைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு முன்பே நிலம் வாங்கிய விவகாரம் வெளியாகி விட்டது. 

கைலாசாவை விரிவுபடுத்தும் நித்யானந்தாவின் சீடர்கள் பொலிவியா நாட்டில் 4.8 லட்சம் ஏக்கரை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைலாச நாட்டை உருவாக்கி உள்ளதாக  உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்திய, தன்னை மதத் தலைவர் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். நித்யானந்தா இப்போது கைலாசத்தின் எல்லைகளை விரிவுபடுத்த விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தென் அமெரிக்காவின் பொலிவியாவை குறிவைத்துள்ளனர். நித்யானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து அங்கு 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை அங்கு ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த இந்தியாவும், பொலிவியாவும் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. 

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, நித்யானந்தாவும், அவரது சீடர்களும் முதலில் பொலிவியாவில் வாழும் பழங்குடியினரின் நிலத்தை ஏமாற்றி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை வாங்கிய பிறகு, நித்யானந்தா அந்தப் பகுதியையும் கைலாசாவின் நாடாக இணைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு முன்பே நிலம் வாங்கிய விவகாரம் வெளியாகி விட்டது. 

இதையும் படிங்க: குளிக்க சென்ற மாணவன் வாய்க்காலில் மூழ்கி பலி.. போலீசார் விசாரணை

நித்யானந்தாவும், அவரது சீடர்களும் சேர்ந்து பொலிவியா நாட்டின் 4 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை தங்கள் பெயர்களுக்கு மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலம் 1000 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. நிலத்திற்கான குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ.8.96 லட்சமாகவும், மாதத் தொகையாக ரூ.74,667 ஆகவும், தினசரி தொகையாக ரூ.2,455 ஆகவும் முன்மொழியப்பட்டது.

இதுகுறித்து பொலிவியாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ''பொலிவியா யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கலசா என்று அழைக்கப்படும் ஒரு தேசத்துடன் இராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை. ஏனெனில் அவர்கள் சர்வதேச சமூகத்தில் வேறு எந்த நாட்டாலும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.

கைலாசாவின் சீடர்கள், நிலத்தை கையகப்படுத்துவதற்காக பல மாதங்களாக பொலிவியாவில் தங்கி இருந்தனர். நிலத்தைக் கைப்பற்ற உள்ளூர் தலைவர்களின் உதவி பெறப்பட்டது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு, நித்யானந்தாவின் குழுவினர் மக்களிடம் இருந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால், இந்தத் தகவல், உடனடியாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிய வந்தது. ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு, நித்யானந்தாவும், அவரது சீடர்களும் உள்ளூர் பத்திரிகையாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பொலிவியா அரசுக்கு நாலாபுறமும் வந்த அழுத்தங்களால், ​​நித்யானந்தாவின் இந்த முழு ஒப்பந்தத்தையும் அந்த அரசு ரத்து செய்துள்ளது.

நித்யானந்தா 2019 முதல் இந்தியாவில் இருந்து தலைமறைவாக உள்ளார்.  அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் கைலாசா என்ற போலி நாட்டை நிறுவியுள்ளார். அதற்கு சொந்த நாணயமும், அரசியலமைப்பும் இருப்பதாகக் கூறுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு, நடிகையுடன், நித்யானந்தா தனிமையில் உல்லாசமாக இருந்த ஆபாச சிடி ஒன்று வெளியானது. அதன் காரணமாக கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், இரண்டு சிறுமிகளைக் கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நித்யானந்தா நாட்டை விட்டு ஓடிவிட்டதால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

இதையும் படிங்க: மீண்டும், மீண்டும் பதவி உயர்வா..? இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share