×
 

மனைவி நடத்தையில் சந்தேகம்.. சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்.. நொய்டாவில் அதிர்ச்சி..!

நொய்டாவில் 42 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த 55 வயது கணவன், அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நசருல்லா ஹைதர் (வயது 55). இவரது மனைவி அஸ்மா கான் (வயது 42). இவர்கள் இருவருக்கும் கடந்த 2005ல் திருமணம் நடந்தது.  இந்த தம்பதிக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் பள்ளி படிப்பில் உள்ளார். இவர்கள் அனைவரும் நொய்டாவில் செக்டார் 15ல் வசித்து வருகின்றனர். அஸ்மா கான் நொய்டா செக்டார் 62ல் உள்ள ஓரு தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். பொறியியல் பட்டதாரியான கணவர் நசருல்லா ஹைதர் தற்போது வேலைதேடி வந்துள்ளார்.

இதற்கிடையே கணவன், மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இல்லை என கூறப்படுகிறது. மனைவி அஸ்மா கான் நடத்தையில் சந்தேகம் கொண்டவராக நசருல்லா ஹைதர் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அடிக்கடி சண்டை, சச்சரவுகளும் நடந்து வந்துள்ளன. கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் குடும்ப பிரச்னை அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் வசிக்கும் தனது சகோதரனான நதீமை போனில் தொடர்பு கொண்ட அஸ்மா கான், தங்களுக்கும் நடக்கும் சண்டை குறித்து பேசி அழுதுள்ளார்.

இதையும் படிங்க: “மல இதெல்லாம் நல்லா இல்ல”... மத்திய அமைச்சர் முன்பே மாஸ் காட்டிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - கடுப்பில் பாஜக!

தினமும் நடக்கும் சண்டையால் மன நிம்மதி இழந்து தவிப்பதாகவும் கூறி கண்ணீர் வடித்துள்ளார். இரவு வெகுநேரம் நதிம் தனது சகோதரியை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சகோதரியின் நிலையால் வருந்திய நதீம், நொய்டாவில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடனே சகோதரி அஸ்மா கானின் வீட்டிற்கு சென்று கணவன் மனைவிக்குள் சமாதானம் செய்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர்.

அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை கணவன், மனைவிக்கு உறவினர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். குழந்தைகளுக்காகவாது ஒன்றாக வாழுங்கள் எனக்கூறி சமாதானம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மணி நேரமாக அறிவுரை வழங்கிய உறவினர்கள் 11 மணிக்கு மேல் அங்கிருந்து சென்றுள்ளனர். உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய சிலநிமிடங்களிலேயே மீண்டும் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முறை வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. 

குழந்தைகளை ஹாலில் விட்டுவிட்டு, கணவன், மனைவி இருவரும் பெட்ரூம் கதவை பூட்டுக்கொண்டு சண்டையிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கணவர் நசருல்லா ஹைதர், மனைவி அஸ்மா கானை கீழே தள்ளி அவரது முகத்தில் தலையனையை வைத்து அழுத்தி உள்ளார். அவர் துடிக்கும் போது சுத்தியலை எடுத்து பலமுறை அஸ்மா கானின் முகத்தில் அடித்துள்ளார். ரத்தம் பீய்ச்சிக்கொண்டு வெளியேறிய நிலையில் அஸ்மா கான் இறக்கும் வரை ஹைதர் அடித்துள்ளார்.

மனைவி இறந்ததும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார் ஹைதர். குழந்தைகள் அம்மாவின் நிலையை பார்த்து கதறி அழுதனர். ஹைதரின் மகன், தனது தாய் மாமாவான நதிமுக்கு போன் செய்து நடந்ததை கூறி உள்ளான். இதனிடையே மனைவியை கொன்ற ஆத்திரம் அடங்காத ஹைதர் 2 கி.மீ தூரத்தில் செக்டர் 20-ல் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்க்கு நடந்தே சென்றார்.

காவலர்களிடம் தான் தனது மனைவியை கொன்றதாக கூறி சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹைதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் கொலையாகி விட, தந்தை சிறை சென்றுவிட அவர்களது 2 குழந்தைகளும் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்.. அப்பனே விநாயகா தண்ணிய குடிச்சிட்டு அப்படியே போயிடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share