×
 

சிறையில் கிடைத்த தொடர்பு.. 6 மாதத்தில் 60 கடைகளில் கொள்ளை.. பிரபல கொள்ளையன் கைதானது எப்படி..?

திருவெறும்பூர் அருகே பிரபல கொள்ளையனை திருவெறும்பூர் ஏ.எஸ்.பி தலைமையிலானா தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவனிடமிருந்து 18 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் எழில் நகர் உள்ளிட்ட பகுதியில் ஆறு வீடுகளில் சமீபத்தில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது. திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் திருவெறும்பூர் ஏ.எஸ்.பி.அரவிந்த் பெனாவா தலைமையிலான தனிப்படை போலீசருக்கு திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பழைய பர்மா காலனி வசிக்கும் மணி (எ ) பாலகிருஷ்ணன் (வயது 38) என்பது தெரியவந்தது அதிரடியாக அவனை கைது செய்த போலீசார், பாலகிருஷ்ணன் இடம் விசாரணை செய்தப் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

பாலகிருஷ்ணன் சொந்த ஊர் தென்காசி என்றும்,  இவன் கடந்த 2014 வது ஆண்டு ஆட்டோ ஓட்டி வந்ததாகவும் அப்பொழுது திருட்டு மாட்டை பாலகிருஷ்ணன் தனது ஆட்டோவில் ஏற்றி சென்றதால் திருட்டு வழக்கில் போலீசார் அவனை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக அக்கம்பக்கத்தினர் திருடன் என அழைக்க துவங்கியதால் பாலகிருஷ்ணனுக்கும் அவனது மனைவி லலிதாவும் அவமானம் தாங்காமல்  தற்கொலைக்கு முயன்ற போது லலிதா பரிதாபமாக உயர்ந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் மாடு திருட்டு வழக்கு மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது..

அங்கு சிறையில் கொள்ளை கும்பலுடன் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தென்காசி பகுதியில் ஆறு மாதத்தில் 50 முதல் 60 கடைகளை உடைத்து கொள்ளை அடித்ததாகவும், இவன் மீது அந்த பகுதியில் 21 வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் சிறையில் இருந்த பொழுது செல்வகுமார், அருவா பாண்டி ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அதன் அடிப்படையில் இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இவர்கள் மேல் உள்ளது. செல்வகுமார் ஒரு திருட்டு வழக்கில் தென்காசியில் கைது செய்யப்பட்டுள்ளான். அருவா பாண்டி தலைமறைவாக உள்ளான். 

இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கு விமலா தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. விமலாதேவிக்கும் பாலகிருஷ்ணனுக்கும் டைல்ஸ் வேலை தெரியும் என்பதால் இந்த பகுதிகளில் டைல்ஸ் வேலை சென்று வந்து உள்ளனர். அப்படி செல்லும் போது எழில் நகர் மற்றும் பெல்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பு மூன்று வீடுகளில் திருடியதாகவும் இந்நிலையில் ஒரு திருட்டு வழக்கில் ஜனவரி மாதம் கைதாகி இந்த மாதம் 3ம் தேதி தான் சிறையில் இருந்து வந்ததாகவும் இந்நிலையில் பெல்பூர் பகுதியில் மீண்டும் மூன்று வீடுகளில் தனது கைவரிசையை காட்டியதாகவும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளான்.

பாலகிருஷ்ணன் இந்த வீடுகளில் திருடிய நகையின் மதிப்பு சுமார் 30 பவுன் ஆகும் ஆனால் தற்பொழுது அவரிடமிருந்து 18 பவுன் மட்டுமே நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவனை கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் திருவெறும்பூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..? 5 நாட்களாகியும் மீட்க முடியாத அவலம்.. அச்சத்தில் குடும்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share