×
 

இடத்தகராறில் வெறிச்செயல்..! தடுக்க போன முதியவருக்கு குத்திகுத்து.. முகத்தில் மிளகாய் பொடி வீசி அட்டகாசம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளாப்பாளையத்தில் நடந்த இடத்தகராறில் முதியவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளாப்பாளையத்தில் நடந்த இடத்தகராறில் முதியவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாராயணன். வயது 70. அவரது மகன் ஏழுமலை. விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் கவியரசன் ஆகியோருக்கும் இடையே விவசாய நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

நேற்று மாலை ஏழுமலை வீட்டில் இருந்த போது அவ்வழியாக வந்த சிலம்பரசன் மற்றும் கவியரசன், ஏழுமலையிடம் பேச வேண்டும் என அழைத்துள்ளனர். ஏழுமலையும் அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்டுள்ளார். பேசிக்கொண்டே இருக்கும் போது சிலம்பரசனும், கவியரசனும் ஏழுமலையை தாக்கத் துவங்கி உள்ளனர். ஏழுமலையும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி உள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து ஏழுமலை மீது போட்ட சிலம்பரசன், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அவரை குத்தி கொலை செய்ய முயற்சித்தார்.

இதையும் படிங்க: துபாயில் தந்தை- மகன் நீரில் மூழ்கி பலி.. நெல்லையில் தாய் தற்கொலை முயற்சி... பதற வைக்கும் சம்பவம்!

தனது மகனை காப்பாற்ற ஓடிவந்த தந்தை நாராயணன் இருவரிடமும் போராடி உள்ளார். சிலம்பரசன் ஏழுமலையை கத்தியால் குத்த முயன்ற போது தடுக்க வந்த முதியவர் நாராயணன் மீது கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நாராயணன் உயிரிழந்தார். சிலம்பரசனும், கவியரசனும் அங்கிருந்து ஓடி தப்பினர். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிந்து விசாரித்து வருவதோடு தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆந்திரப் பெண் பொறியாளர்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; "என் மகளை கொன்றது யார்?" தந்தை ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share