×
 

மோடி prime minister இல்ல! Picnic minister - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதை விட வேறு என்ன வேலை இருக்கிறது என மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது, மணிப்பூர் நிலவரம் பற்றி ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister enrum ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை, மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.

இதையும் படிங்க: இளம்பெண் எம்.பி முதுகில் கை வைத்து கூப்பிட்ட ஆ.ராசா..! வைரலான போட்டோ..!

இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கூறிய நிலையில், ஒருதலைப் பட்சமாக நடந்துக் கொள்வதாக கூறி மீண்டும் பல கேள்விகளை வைகோ முன்வைத்தார்.

நான் பேசியதில் எந்த அன் பார்லிமெண்ட்ரி வார்த்தை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வைகோ, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! எம்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? கன்னங் கிழிபட நேரும்! கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என மாநிலங்களவையில் முழங்கினார்.

மேலும், இந்த பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நான் வைகோ. என்னை பேசக்கூடாது என சொல்ல நீங்கள் யார் என்றும் நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன்., நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன் என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வைகோ பேசிக் கொண்டிருந்தபோதே நேரம் முடிந்துவிட்டதாக கூறி துணைத்தலைவர் அவரை அமரச் செய்தார்.

இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் கூட்டம்! முதலமைச்சர் போடும் புது ரூட்! A to Z அலசல்…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share