×
 

ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் முன்பு வெடித்த சர்ச்சை; நடுரோட்டில் கட்டி உருள தயாரான நாதக - காங்கிரஸ் தொண்டர்கள்! 

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


ஈரோட்டில் இரண்டாம் நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான்,  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டு முன்பாக பிரச்சாரம் செய்ய வந்தபோது நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர்கள் தந்தை பெரியார் குறித்து விமர்சித்து பேசியதால் ஆவேசம் அடைந்த காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள்  முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதால் பதற்றம் உருவானது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சீமான் இரண்டாம் நாளாக இன்று காலை, காளை மாட்டு சிலை அருகே பிரச்சாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி வீதி, மண்டபம் வீதி ஆகிய இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: “எங்க தில்லு யாருக்கும் கிடையாது” - அதிமுக, பாஜகவை மறைமுகமாக சாடிய சீமான்!

 அதனை தொடர்ந்து திருமகன் ஈவேரா சாலையில் இளங்கோவன் வீட்டு முன்பாக பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது அவருக்கு முன்னதாக பேச்சாளர் இடும்பாவனம் கார்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பெரியார் குறித்து பேச தொடங்கினார். அப்போது EVKS இளங்கோவன் வீட்டிற்குள் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் சாலைக்கு வந்து அவர்களை நோக்கி முழக்கங்களை எழுப்பினர். 

பெரியார் குறித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசும் சீமானின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் உரிய அனுமதி பெறாத இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.  பதிலுக்கு  நாம் தமிழர் கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரை நோக்கி கூச்சலிட்டபடி வேகமாக வந்ததால் பதற்றம் உருவானது. 


உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் இரு தரப்பினரையும் பிரித்து அமைதிப்படுத்தினர். 
இந்த பரபரப்புக்கு இடையே எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் சீமான் தேர்தல் பிரச்சார உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

தந்தை பெரியார் குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்து வரும் சீமான் எந்த இடத்திலும் தந்தை பெரியார் குறித்து பேசாமல் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.. 
ஈரோட்டில் இன்று சீமான் அனுமதி பெறாத சில இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share